ஆன்லைன் மோசடியின் மற்றொரு வழக்கில் பெங்களூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ரூ. 6.41 கோடி ரூபாயை இழந்துள்ளார். அப்பப்பா! கேட்பதற்கே இந்த தொகை ஆச்சரியமாக இருக்கிறது. ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என ஏமாற்றி வந்த கும்பல் தற்போது கோடி கணக்கில் ஏமாற்றி பணம் பறிக்கத் தொடங்கியுள்ளது.. இந்த சம்பவம் எப்படி நடந்தது? எப்படி இவ்வளவு பெரிய தொகையை இந்த முதியவர் இழந்தார்? என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.
முன்பெல்லாம் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ஏமாற்றி வந்தனர். தற்போது ஏமாறும் மக்கள் எவ்வளவு தொகையை இழக்கின்றனர் என்று கேட்டாலே பிரம்மிப்பாக இருக்கிறது. சிலர் இது போன்ற மோசடிகளில் சிக்கி தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கின்றனர். சிலர் கோடிக்கணக்கில் ஏமாறுகின்றனர்.

சமீபகாலமாக இந்த இணைய அச்சுறுத்தல்கள் தினசரி அடிப்படையில் நடக்கின்றன. அதேபோலத்தான் இந்த முதியவருக்கும் நடந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட முதியவருக்கு ஜூலை 19-ஆம் தேதி அன்று ஒரு அழைப்பு வந்துள்ளது.. இந்த அழைப்பு வாட்ஸ் அப் வழியாக வந்துள்ளது. மீரா பட்டேல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு நபர் அந்த முதியவரிடம் பேசியுள்ளார்.
நடப்பது அனைத்தும் உண்மை என்று அந்த முதியவருக்கு நம்பவைக்க வாட்ஸ்அப்பில் ஒரு குரூப்பும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த குரூப்பின் முக்கிய நபராக மீரா பட்டேல் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அதே குரூப்பில் இருந்து ஈக்விட்டி ஃபண்டுகளின் பிரதிநிதிகளாக காட்டிக்கொண்டு ஹர்திக் ஷா மற்றும் ஆஷிஷ் கோயல் என இரண்டு நபர்கள் பாதிக்கப்பட்ட முதியவரிடம் பேசியுள்ளனர்.
மேலும் டெலாவேர் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தில் இருந்து அழைப்பதாகக் கூறி அந்த முதியவரிடம் பேசியுள்ளனர். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு பாதிக்கப்பட்ட முதியவருக்கு பயிற்சி வழங்க முன்வந்துள்ளனர். முதலீடுகளுக்கு 700 சதவீதம் வரை லாபம் இருக்கும் என்று கூறி அந்த முதியவரிடம் ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.
வாட்ஸ்அப் குரூப்பை உண்மை என்று நம்பி பங்குச்சந்தை மற்றும் முதலீடு தொடர்பாக இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட நபர் மோசடிக்காரர்களின் பேச்சில் விழுந்தார். மேலும் எந்தவித சந்தேகமும் ஏற்படக்கூடாது என்பதற்காக மோசடிக்காரர்கள் 15 நாட்களுக்கான ஆன்லைன் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பயிற்சி வகுப்புகளின் போது பாதிக்கப்பட்டவர் மற்ற குழு உறுப்பினர்களுடன் ஒரு குரூப்பில் சேர்க்கப்பட்டார்.
குரூப்பில் இருந்த சிலர் முதலீட்டு நிபுணர்கள் போல காட்டிக் கொண்டு பங்குச்சந்தை தொடர்பான டிப்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர். இவை அனைத்தும் பார்ப்பதற்கு உண்மையானது போல அந்த முதியவருக்கு தோன்றியுள்ளது. மேலும் பயிற்சி வகுப்புகளின் போதே மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்ட முதியவரிடம் அதிக தொகையை முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் பங்குகள் மற்றும் ஐபிஓவுக்கு பணத்தை செலுத்த சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அதோடு லாபத்தை அதிகரிக்க செக்யூரிட்டி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அந்த முதியவரிடம் கூறியுள்ளனர். இதை நம்பி அந்த முதியவரும் தொடர்ந்து பணத்தை அனுப்ப தொடங்கியுள்ளார். அவரது ஆரம்ப முதலீடுகள் அவருக்கு வருவாய் வழங்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட முதியவர் தன்னுடைய பணத்தை மீட்டெடுப்பதற்காக மீண்டும் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார்.
இதற்காக அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கியுள்ளார். முதலீடு செய்வதற்காக ரூ. 3.2 லோன் எடுத்து, அதோடு ரூ.70 லட்சம் பணத்தையும் சேர்த்து அனுப்பியுள்ளார். இப்படியே தொடர்ந்து மொத்தமாக ரூ.6.41 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். அதன் பிறகு தனது கணக்கிலிருந்து பணத்தை மீட்டெடுக்க முயன்றுள்ளார்.
அப்போதுதான் அவர் டெபாசிட் செய்த IEF என்ற தளம் திடீரென காணாமல் போயுள்ளது தெரியவந்தது. அதோடு குரூப்பில் இருந்த மீரா மற்றும் அவருடைய கூட்டாளிகளையும் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முதியவருக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பின்னரே தான் ஏமாந்திருப்பதை தெரிந்து கொண்டு முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில் இந்த குறிப்பிட்ட வழக்கில் மோசடி செய்பவர்கள் பல்வேறு மொபைல் நம்பர்கள், வங்கி கணக்குகள் மற்றும் போலி பரிவர்த்தனைகளை காட்டி ஆன்லைன் போர்ட்டல் மூலம் ஏமாற்றியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அனைத்து தகவலையும் உண்மையானது என்பதை காண்பிப்பதற்காக செபியில் பதிவு பெற்ற நிறுவனம் போல காண்பித்து ஏமாற்றியுள்ளனர். முதலீடு தொடர்பான யோசனைகளை வழங்குவதாக கூறி ஆள் பெயர் தெரியாத நபரிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அவற்றை தவிர்த்து விடுவது நல்லது.
இதுபோன்ற பெரிய அளவிலான நிதி சிக்கலில் சிக்காமல் இருக்க மோசடிக்காரர்களின் யுத்திகள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வீட்டு உறவினர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications