உணவு வணிகம், டீ கடை என கிட்டத்தட்ட அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்போது இவற்றில் பேக் செய்து வழங்குகின்றனர். அதுவும் கொதிக்க கொதிக்க டீ-யை பிளாஸ்டிக் பையில் கட்டி வழங்கும்போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் டீ-யை வாங்கிக் குடிக்கும் மக்களுக்கு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது குறித்து சிலர் சிந்திப்பதில்லை.
இது போன்ற பிளாஸ்டிக் பைகள் பெரும்பாலான கடைகளில் பயன்படுத்தப்படுவதற்கு காரணம் அவை வெப்பத்தை தக்க வைக்கும், கசியாமல் தடுக்கும், சேதமடையாமல் உணவுப்பொருள் வாடிக்கையாளரை சென்றடையும். இதன் காரணமாக பிளாஸ்டிக் பெரும்பாலான கடைகளின் பொதுவான தேர்வாகிவிட்டது. அதோடு மிக மலிவாகவும், எங்கும் கிடைக்கும் ஒன்றாகவும் இருப்பதால் கடைக்காரர்கள் இவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் ஒவ்வொரு முறையும் இது போன்ற பிளாஸ்டிக் பேக், பிளாஸ்டிக் பவுல், பிளாஸ்டிக் பெட்டி போன்றவற்றை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும்போது அவை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் விளைவுகள் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3.5 லட்சம் டன்னுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன.
இதில் பெரும் பகுதி பிளாஸ்டிக் பைகள் உணவு மற்றும் குளிர்பான துறைகளில் இருந்து உற்பத்தியாகிறது. இவற்றை மக்கள் சராசரியாக 20 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இது போன்ற பிளாஸ்டிக் பைகள் மற்றும் கிண்ணங்கள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
மேலும் வடிகால்களில் இது போன்ற பிளாஸ்டிக் கவர்கள் மாட்டிக் கொண்டால் அதுவும் சிக்கல்தான். குப்பைக் கிடங்குகளைப் பார்த்தால் மற்ற குப்பைகளை விட தற்போது பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் தான் அதிகளவில் இருக்கிறது. இவை மண்ணை வீணாக்குவதோடு நீரிலும் மைக்ரோ பிளாஸ்டிக்களை வெளியிடத் தொடங்குகின்றன.
எனவே இது போன்ற பிளாஸ்டிக் பைகளுக்கு ஒரு மாற்று இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் பிளாஸ்டிக்குக்கு இணையான வலிமை, கசிவு ஏற்பட்டால் அதை தடுக்கும் திறன், வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதைத்தான் பெங்களூரைச் சேர்ந்த ஏகோஸ் என்ற நிறுவனம் செய்து காட்டியுள்ளது. 2020-ஆம் ஆண்டு தன்விதா சத்யானந்த், பாரத் சத்யானந்த் மற்றும் தன்விதாவின் கணவர் ஸ்ரீநிதி ராஜா ராம் ஆகியோர் இணைந்து நிறுவிய ஏகோஸ் நிறுவனம் உணவுப் பொருட்களை பேக் செய்வதற்கு காகிதங்களைக் கொண்ட பைகளை உருவாக்கி வருகிறது.
இவற்றை பிளாஸ்டிக் பைகளுக்கு இணையாக ஒரு முறை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்காக தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் இவர்கள் பைகளை உருவாக்கி வருகின்றனர். இவர்கள் காகித கிண்ணங்கள், கப்புகள், மூடிகள் போன்றவற்றையும் தயாரிக்கின்றனர்.
உணவு தரத்திலான காகிதக் கிண்ணங்கள், கப்புகள், பெட்டிகள், மூடிகள் போன்றவற்றை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக ITC-யிலிருந்து பெறப்படும் காகிதங்களை பயன்படுத்துகின்றனர். இதில் நீர் சார்ந்த பேரியர் ஒன்று உள்ளது. இதனால் இதில் போடப்படும் பொருள் எதுவும் கசியாது. அதோடு தூக்கி எறியப்பட்ட 180 நாட்களுக்குள் 98 சதவீதம் மக்கும் தன்மையுடனும் தயாரிக்கப்படுகிறது. இதற்கு மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சான்றளித்துள்ளது
பேப்பர் கிண்ணங்களைப் போலல்லாமல் ரசம், சாம்பார், கிரேவி என அனைத்தையும் தாங்கும் திறன் கொண்டதாக இந்த வகை கிண்ணங்கள் தயாரிக்கப்படுகிறது. ஆரம்பகால சோதனைக்காக பல வாடிக்கையாளர்களுடன் இந்நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்படி எம்டிஆர் நிறுவனத்துடனும் சோதனை செய்து பார்த்தது. முதன்முதலாக இந்நிறுவனம் காகித கிண்ணங்களில் ரசத்தை நிரப்பி டெலிவரிக்கு அனுப்பி வைத்தது. கிண்ணத்திலிருந்து ரசம் கசியாமல் இருந்தாலும் அவை வாடிக்கையாளரை சென்றடையும் வரை வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
அந்த சோதனையில் இந்நிறுவனம் வெற்றி கண்டது. இவர்கள் பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் இயந்திரங்களைப் பயன்படுத்தி காகிதங்களைக் கொண்ட பேக்கிங் மெட்டீரியலை தயார் செய்கின்றனர். இந்த மெஷின்கள் 350 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயங்கி 45 யூனிட்கள் வரை உற்பத்தி செய்கிறது. 50 மில்லி முதல் 1000 மில்லி வரை பேக் செய்யக்கூடிய பைகள், கிண்ணங்கள், பெட்டிகளை நிறுவனம் தயார் செய்கிறது.
இதுவரையில் ஏகோஸ் நிறுவனம் 4.5 கோடி யூனிட்களுக்கும் மேலாக பேக் செய்யக்கூடிய காகித பைகளை உற்பத்தி செய்துள்ளது. எம்டிஆர், லூலூ ஹைப்பர் மார்க்கெட், மெக்னோலியா பேக்கரி, மிலானோ ஐஸ்கிரீம்ஸ் போன்ற பெரு நிறுவனங்களுடனும் இந்நிறுவனம் பணியாற்றி வருகிறது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் 5.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு பிரச்சனை ஏற்படுத்தாத பைகளுக்கான தேவை அதிகமாக இருந்து வருகிறது.
பெருவாடிக்கையாளர்கள் மட்டுமின்றி சிறிய வணிகங்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்களும் இந்தத் தயாரிப்பை சோதித்துப் பார்க்க வசதியாக லாப வரம்பை நிறுவனம் 60 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைத்துள்ளது. எப்பொழுதெல்லாம் பிளாஸ்டிக் பைகளில் கொதிக்கும் ரசம், குழம்பு ஆகியவை பேக் செய்யப்படுகிறதோ? அப்போதெல்லாம் அதிலிருந்து மைக்ரோ பிளாஸ்டிக்-கள் வெளியிடப்படுகிறது.
இதனால் புற்றுநோய் உட்பட பல சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இது போன்ற காகிதப் பைகளை பயன்படுத்துவது ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். பெங்களூரு போன்ற நகரங்களில் தற்போது விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது ஒவ்வொரு உணவகங்களும் இதை பயன்படுத்த தொடங்கினால் தூய்மையான எதிர்காலத்தை கொண்டு வரலாம் என்று நிறுவனம் நம்புகிறது.
தினம் தினம் மலை எனக் குவியும் பிளாஸ்டிக் குப்பைகளுடன் இந்தியா போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நீடித்த மற்றும் மட்க கூடிய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டால் அவை கண்டிப்பாக மண் பிரச்சனையை தடுக்கும் என்பதில் ஐயமில்லை.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications