கல்யாண ஆசை, ஆபாச வீடியோ.. ரூ.1.14 கோடி அபேஸ்.. பெங்களூர் டெக் ஊழியர் கதறல்..!

இந்தியாவில் இணையம் வாயிலாக நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இளம் தலைமுறையினர் முதல் பிடித்து ஐடி வேலை, அரசு ஊழியர்கள் வரையில் அனைத்து தரப்பினரும் ஏமாறுகிறார்கள். முன்பெல்லாம் விபரம் தெரியாதவர்கள் தான் டெபிட் கார்ட் 16 நபர் பிரச்சனையில் மாட்டினார், ஆனால் இப்போது வேலைவாய்ப்பு, முதலீடு, பார்ப் டைம் ஜாப் என பலவற்றில் இளம் தலைமுறையினர் ஏமாறுகிறார்கள்.

பெங்களூர் டெக் ஊழியர் ஒருவர் மேட்ரிமோனியல் இணையதளத்தில் ஒரு பெண்ணுடன் நட்பாக இருந்த நிலையில், அந்த பெண் வாயிலாக சுமார் 1.14 கோடி ரூபாயை இழந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பெரும்பாலானவர்கள் மேட்ரிமோனி தளத்தின் வாயிலாக தான் திருமணம் செய்துக்கொள்கிறார்கள்.

கல்யாண ஆசை, ஆபாச வீடியோ.. ரூ.1.14 கோடி அபேஸ்.. பெங்களூர் டெக் ஊழியர் கதறல்..!

இப்படியிருக்கையில் பெங்களூரு கேஆர் புரத்தை சேர்ந்த 41 வயது நபர் இங்கிலாந்தில் பணியாற்றி வந்தார், நிறுவனத்தில் முக்கிய தொழில்நுட்பத்தில் பயிற்சி எடுக்க பெங்களூர் வந்துள்ளார். இந்தியா வந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட அவர் தனது சுயவிவரத்தை மேட்ரிமோனி தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த மோட்ரிமோனி தளத்தில் திருமணம் செய்துக்கொள்ளும் ஆசை உடன் ஒரு பெண்ணுடன் பேச துவங்கியுள்ளார். இந்த பெண்ணுடன் நட்பைத் தொடர தொலைபேசி எண்களை பரிமாறிய பின்னர், இருவரும் பேசிக்கொண்டதில் அந்த பெண் தனது தந்தை இறந்துவிட்டதாகவும், தனது தாயுடன் வசித்து வருவதாகவும் கூறினார்.

இந்த பெண் மோட்ரிமோனி தளத்தில் கொடுத்த விபரம் அனைத்தும் போலி என அப்போது அந்த 41 வயது டெக் ஊழியருக்கு தெரியாது. போன் வாயிலாக நட்பாக பேசிக்கொண்டு இருந்த போது ஜூலை 2ம் தேதி டெக் ஊழியருக்கு அந்த பெண் போன் செய்து தனது தாயாருக்கு மருத்துவ அவசர சிகிச்சைக்காக ரூ.1,500 கேட்டுள்ளார்.

அடுத்த சில நாட்களில் அதாவது ஜூலை 4 ஆம் தேதி காலை 12 மணிக்கு வீடியோ கால் வாயிலாக வந்த அந்த பெண் தானாக ஆடைகளை கழற்றிக் கொண்டார். இதை எதிர்பாக்காத டெக் ஊழியருக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி இந்த வீடியோ கால்-ஐ அந்த பெண் ரெக்கார்ட் செய்துள்ளார்.

பின்னர் இந்த வீடியோ வைத்து டெக் ஊழியரை மிரட்டி 1.14 கோடி ரூபாய் பணத்தை 2 வங்கிகளில் இருக்கும் 4 வங்கி கணக்குகளுக்கு பிரிமாற்றம் செய்யும் படி மிரட்டியுள்ளார். இதில் பயந்து போன டெக் ஊழியர் பயத்தில் பணத்தை டிரான்ஸ்பர் செய்துள்ளார், இதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து அந்த பெண் பிளாக்மெயில் செய்த நிலையில்...

டெக் ஊழியர்கள் அந்த பெண்ணின் உண்மையான பெயரை பல வழிகளில் கண்டுப்பிடித்துவிட்டார். இதை தொடர்ந்து டெக் ஊழியர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், ஐடி பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்திய நிலையில் 4 வங்கி கணக்குகளை முடங்கிய நிலையில் 84 லட்சம் ரூபாய் பணம் freeze செய்யப்பட்டு உள்ளதாக உயர் காவல் அதிகாரி எஸ் கிரிஷ் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 30 லட்சம் ரூபாய் பணத்தை அந்த பெண் பயண்படுத்தி விட்டார், மேலும் அந்த பெண்ணை டிராக் செய்யும் பணிகள் நடந்து வரும் வேளையில் காவல் துறையினர் மக்களை இதுப்போன்ற விஷயங்களில் பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் முன் மிகவும் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+