பெங்களூரைச் சேர்ந்த டெக்கி என்பவர் புதுவகையான மோசடியில் சிக்கி ரூ. 2.8 கோடியை இழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் வங்கி விவரங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகி, கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் மோசடி செய்தவர்கள் அபகரித்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சில ஸ்கேம் செய்திகள் குறித்து நாம் அவ்வப்போது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் பயன்படுத்தும் யுக்தி என்னவென்று தெரியவரும். சிலர் தங்களுக்கே தெரியாமல் மோசடி செய்பவர்களின் வலையில் விழுகின்றனர். அதுவே முன்கூட்டியே அவர்கள் பயன்படுத்தும் யுக்திகளை தெரிந்து வைத்திருந்தால்.. நிதி இழப்புகளைத் தடுக்கலாம்.

இந்தச் சம்பவத்தில் மோசடிக்காரர்கள் ஒரு புதுமையான யுக்தியை பயன்படுத்தியுள்ளனர். சிட்டி பேங்கின் ஊழியர் எனக் கூறிக்கொண்டு ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ் அப் அழைப்பு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் கிரெடிட் கார்டு ஒப்புதல் நிலுவையில் இருப்பதாக அழைப்பு விடுத்தவர் தெரிவித்திருக்கிறார். எனவே உடனடியாக ஒரு புதிய சிம் கார்டை வாங்குமாறும் அறிவுறுத்தினார்.
சில நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவருக்கு சிட்டி யூனியன் வங்கியிலிருந்து ஒரு மொபைல் போன் அடங்கிய பார்சல் கிடைத்துள்ளது. மோசடியை அறியாமல் பாதிக்கப்பட்டவர் புதிய சிம் கார்டை மொபைலில் சொருகி பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அந்த மொபைல் போனில் ஏற்கனவே தீங்கிழைக்கும் அப்ளிகேஷன்கள் டவுன்லோட் செய்யப்பட்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு கிடைத்த OTP தகவல்கள் அனைத்தும் மோசடிக்காரர்களுக்கும் அனுப்பப்பட்டது. இதைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரின் பிக்சட் டெபாசிட்களில் இருந்த தொகை உட்பட 2.8 கோடி ரூபாயை வங்கி கணக்கில் இருந்தது அபகரித்தனர்.
இதற்கு முன்னர் ஸ்கைப், வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவற்றை வைத்து மோசடி செய்து வந்த கும்பல் தற்போது புதிதாக மொபைல் ஃபோன்களையும் வழங்கி மோசடி செய்து வருகின்றனர். OTP மற்றும் மெசேஜ் போன்றவற்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு தெரியாமல் வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர்.
தற்போது பாதிக்கப்பட்டவர் ஒயிட்ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் ஐடி சட்டத்தின் பிரிவுகளின் கீழ் விசாரணையை தொடங்கியுள்ளனர். புகார் அளித்தவரின் கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 27-ஆம் தேதி அன்று சிட்டி பேங்கில் ஊழியர் எனக் கூறிக்கொண்டு ஒருவரிடமிருந்து வாட்ஸ் அப் அழைப்பு வந்துள்ளது.
டிசம்பர் 1-ஆம் தேதி அன்று சிட்டி யூனியன் பேங்கில் இருந்து ஒரு கொரியர் வந்தது. அதில் MI 13 C பிராண்டின் மொபைல் போன் இருந்தது. புதிய சிம் கார்டை இந்த சாதனத்தில் தான் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தியுள்ளார். அதன்பின் டிசம்பர் 5, 2024 அன்று வங்கிக்கு சென்று தெளிவு படுத்தியபோது புகார்தாரரின் 2 கணக்குகளில் இருந்து ரூ. 2.8 கோடி மோசடியாக பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications