OLX-ல் பழைய மெத்தையை விற்க ஆசைப்பட்டு ரூ.68 லட்சத்தை இழந்த பெங்களூரு என்ஜினீயர்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக இன்று வங்கி சேவைகள் உள்ளங்கையில் வந்து விட்டது. அதேசமயம், மோசடி நபர்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல புதுமையான வழிகளில் பண மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக வங்கிகளும் அரசும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இருப்பினும் சைபர் குற்றவாளிகளிடம் பலர் பணத்தை ஏமாறுவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர் ஆன்லைனில் பழைய மெத்தையை விற்பனை செய்ய ஆசைப்பட்டு மோசடி நபரிடம் ரூ.68 லட்சம் இழந்துள்ளார்.

OLX-ல் பழைய மெத்தையை விற்க ஆசைப்பட்டு  ரூ.68 லட்சத்தை இழந்த பெங்களூரு என்ஜினீயர்

பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஆதிஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அண்மையில் OLX-ல் தன்னிடம் இருந்த பழைய மெத்தையை விற்பனை செய்ய விளம்பரம் செய்து இருந்தார். அதன் விலையை ரூ.15,000 என குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த 6ம் தேதியன்று ஒருவர் தன்னை ரோஹித் சர்மா என்று கூறி கொண்டு ஆதிஷை போனில் தொடர்பு கொண்டார். மெத்தையை வாங்க விருப்பப்படுவதாகவும் ஆதேஷிடம் அவர் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர்கள் இடையே பேரம் நடந்து விலை உறுதியானது.

இதனையடுத்து, டிஜிட்டல் பேமெண்ட்ஸ் ஆஃப் மூலம் பணம் அனுப்புவதாக ஆதேஷிடம் ரோஹித் சர்மா தெரிவித்தார். ஆனால் சில நிமிடங்களுக்கு பிறகு , பணத்தை பரிமாற்றம் செய்ய முடியவில்லை என்று மீண்டும் அவரை ரோஹித் சர்மா போனில் தொடர்பு கொண்டார்.

மேலும், ஆதேஷிடம் எனது யுபிஐ ஐடிக்கு ரூ.5 அனுப்புங்க அதை நான் திருப்பி தந்து விடுகிறேன் என்று அந்த நபர் தெரிவித்தார். அதனை நம்பி ஆதேஷும் ரூ.5 அனுப்பினார். உடனே மோசடி நபரான ரோஹித் சர்மா ஆதேஷ் கணக்குக்கு ரூ.10 அனுப்பினார். பின் ஆதேஷிடம் ரூ.5,000 அனுப்ப சொல்லி, பின்பு அதற்கு ரோஹித் சர்மா ரூ.10,000 திருப்பி அனுப்பினார்.

அதன் பிறகு ரூ.7,500 அனுப்பினால் ரூ.15,000 திருப்பி தருவதாக ஆதேஷின் ஆசையை ரோஹித் சர்மா தூண்டினார். இதனையடுத்து அவரும் ரூ.7,500 அனுப்பினார். ஆனால் இந்த முறை அவரது கணக்கு ரூ.30,000 வந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஆதிஷுக்கு போன் பண்ணி எதிர்பாராத விதமாக ரூ.30,000 அனுப்பி விட்டேன், நான் அனுப்பிய இணைப்பை கிளிக் செய்து OTPஐ என்னிடம் தெரிவிப்பதன் மூலம் பணத்தை திருப்பி தருமாறு ஆதிஷிடம் மோசடி நபர் நபர் தெரிவித்தார். அதனை நம்பியும் அவரும் அதனை செய்தார். இதனையடுத்து ஆதிஷ் கணக்கில் இருந்து பணம் காணாமல் போக ஆரம்பித்தது.

அதன் பிறகும், ஆதிஷிடம் தொடர்பு கொண்டு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பணத்தை திருப்பி அனுப்ப விடாமல் தடுப்பதாகவும், பணத்தை அனுப்புமாறு ரோஹித் சர்மா வலியுறுத்தியுள்ளார். மேலும் ராஜேஷ் மிஸ்ரா என்ற பெயரில் மற்றொரு கணக்கு எண்ணை கொடுத்தார்.

ஆன்லைன் பணம் செலுத்துதல் பற்றி அறிவு இல்லாத ஒரு வர்த்தகர் என்று மோசடி நபரான ரோஹித் சர்மாவை ஆதிஷ் நினைத்தார். அவர் பகிர்ந்த அடுத்த லிங்குகள் லட்சங்களில் இருந்தன. ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்தின் மூலம் பணத்தை ஆதிஷ் இழக்க தொடங்கினார். இரு முறை ரூ.15 லட்சம் ஒரு முறை ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.68.6 லட்சத்தை இழந்தார். டிசம்பர் 6 முதல் 8 வரை பணத்தை இழந்துள்ளார்.

இதனையடுத்து ரோஹித் சர்மாவிடம் பணத்தை திருப்பி தருமாறு அவர் கேட்டுள்ளார். இதனையடுத்து மோசடி நபர் மீண்டும் தொடர்ந்து அதிக பணம் கேட்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை ஆதிஷ் உணர்ந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தை அணுகி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+