தொழில்நுட்ப புரட்சியால் வங்கி சேவைகள் டிஜிட்டல் மயமாகி விட்டது. இதனால் ஒருவருக்கு பணம் அனுப்புவது போன்ற பண பரிவர்த்தனைகள் மிகவும் எளிமையாகி விட்டது. அதேசமயம் சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகிறது.
OTP இல்லாமலே வங்கி கணக்கில் இருந்து சைபர் கிரைம் மோசடியாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை திருடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அண்மையில் பெங்களூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் சைபர் கிரைம் மோசடி நபரிடம் ரூ.1 லட்சம் இழந்துள்ளார்.

பெங்களூரு நகரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹெப்பல் பகுதியில் வசிப்பவர் 43 வயதான ஆசிரியராக பணியாற்றும் பெண்மணி. அண்மையில் அந்த பெண்மணி, ஒரு ஆணிடம் ரூ.1 லட்சத்தை இழந்துள்ளார், மோசடி நபர் அந்த பெண்ணின் தந்தை நண்பர் என்று கூறி, அவரது டிஜிட்டல் வாலட்டுக்கு பணம் அனுப்புவதாக கூறி அந்த பெண்ணின் கணக்கில் இருந்து அந்த பணத்தை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி கூறுகையில், நான் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது தெரியாத எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அதை எடுத்து பேசியபோது, என்னை அழைத்த நபர் இந்தியில் பேசினார்.
எனது தந்தையின் நண்பரான சார்ட்டட் அக்கவுண்ட் போல் ஆள்மாறாட்டம் செய்து பேசினார். எனது தந்தை என் வங்கி கணக்குக்கு கொஞ்சம் பணம் அனுப்ப சொன்னார் என்று என் UPI ஐ.டி.யை கேட்டார். நானும் அதனை நம்பி கொடுத்தேன். இதனையடுத்து அவர் ஒரு சாதாரண செய்தியை போன்பே-ல் அனுப்பினார்.
மேலும் பணம் எனது கணக்கு அனுப்பப்பட்டு விட்டதாக தெரிவித்தார். மேலும் நான் சொல்வதை செய்யும்படி சில அறிவுறுத்தல்களை வழங்கினார். நான் அதனை செய்தபோது என் கணக்கில் இருந்து இரு முறை ரூ.25,000, ஒரு முறை ரூ.50,000 என மொத்தம் ரூ.1 லட்சம் கழிந்தது. இவை அனைத்தும் OTPகள் இல்லாமல் கழிக்கப்பட்டது.
இதனையடுத்து நடந்த சம்பவத்தை எனது தந்தையிடம் தெரிவித்தேன். மோசடி வலையில் நான் சிக்கியதை அறிந்து என் மீது கோபப்பட்டார். நான் ஏன் யாரிடமாவது உனக்கு பணம் அனுப்ப சொல்ல போகிறேன் என்று கோபமாக தெரிவித்தார்.
நான் சைபர் க்ரைம் உதவி எண்ணை அழைத்தேன். ஆனால் அந்த பணியாளருக்கு ஆங்கிலம் அல்லது இந்தி புரியவில்லை. இதனையடுத்து புகார் கொடுத்து அந்த நபரின் கணக்கை முடக்க வேண்டும் என்பதற்காக பணத்தை இழந்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த பகுதி காவல் நிலையத்துக்கு சென்றேன்.
ஆனால் காவல் நிலைய அதிகாரிகள் புகார் பதிவு செய்வதை தாமதப்படுத்தி, முதல்வர் மற்றும் கவர்னரின் பாதுகாப்பு பணியில் மும்முரமாக இருப்பதாக கூறினர். சில முதல்வர்கள் அல்லது கவர்னர்கள் வருகிறார்கள் என்றால், அவர்கள் (போலீசார்) சாமானியர்களை கவனிக்க மாட்டார்கள் என்று அர்த்தமா.
குற்றவாளியின் கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அவர்களிடம் தொடர்ந்து கூறினோம். ஆனால் அவர்கள் தாமதித்தனர் என்று தெரிவித்தார். போலீஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று அந்த பெண்ணை அழைத்து அந்த குற்றவாளியின் கணக்கை முடக்க வங்கிக்கு இமெயில் அனுப்புவதாக தெரிவித்தனர்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications