பெங்களூரு: சைபர் கிரிமினல்களிடம் சிக்கி பணத்தை இழந்த பெண்ணிற்கு, மீண்டும் அந்தப் பணம் கிடைத்துள்ளது. அதைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மோசடிகளும், அதிகரித்த வண்ணம் உள்ளன. யூடியூப் வீடியோக்கள் பார்த்தால் பணம் கிடைக்கும் என்று கூறிக்கொண்டு சில கும்பல் மோசடி செய்யும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற கும்பலிடம் சிக்கி தங்களின் பணத்தை இழந்தவர்கள் பலர். இதனால்தான் சைபர் கிரைம் போலீசார் அறிமுகம் இல்லாதவர்களிடம் பணப்பரிமாற்றங்கள் செய்யக்கூடாது என்று கூறி எச்சரித்தவாறு உள்ளனர். ஆனால் இது போல் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவே இல்லை. அதற்கு சான்றாக பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமார் ரூ. 2.7 கோடி ரூபாயை சைபர் கிரிமினல்களிடம் சிக்கி இழந்துள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று நடந்துள்ளது.
அந்தப் பெண்ணின் மொபைல் போனுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி அன்று ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஒரு ஸ்கேம் லிங்கை வைத்து மோசடி கும்பல் அனுப்பியுள்ளனர். அந்த மெசேஜில் நிறைய யூடியூப் சேனல்களின் லிங்க் இருந்துள்ளது. மேலும் அதனை கிளிக் செய்து லைக் செய்தால் பணம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது.
இதனை நம்பிய அந்தப் பெண் உடனே லைக் செய்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் அவர் ஒரு டெலிகிராம் குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு நடுவே மோசடி கும்பலில் இருந்த ஒருவர் அந்தப் பெண்ணிற்கு அழைப்பு விடுத்து, மற்ற யூடியூப் சேனல்களை லைக் செய்தால் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும் என்று கூறியுள்ளார், இதை நம்பி அந்தப் பெண்ணும் அவர்கள் கூறிய யூடியூப் சேனல்களுக்கு லைக் செய்துள்ளார். இதன் மூலம் அந்தப் பெண் ரூ. 10,000 ரூபாய் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு மோசடி கும்பலில் இருந்த ஒருவர், அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்து, குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், குறுகிய கால இடைவெளியில் அதனை இரட்டித்துத் தருவதாக உறுதியளித்துள்ளார். மேலும் அவர் இணைக்கப்பட்ட டெலிகிராம் குரூப்பில், நிறைய நபர்கள் தங்களுக்கும் இதுபோல் முதலீடு செய்த தொகைக்கு இரட்டித்த லாபம் கிடைத்ததாக போலியாக அந்தப் பெண்ணை நம்ப வைத்துள்ளனர்.
அவர்கள் கூறியதை நம்பிய அந்தப் பெண் இரண்டு மூன்று பேங்க் அக்கவுண்ட்களிலிருந்து மோசடி கும்பலின் பேங்க் அக்கவுண்டுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 30 லட்சம் வரை பணத்தை அனுப்பியுள்ளார். மேலும் ஒவ்வொரு முறை பணத்தை அனுப்பும் போதும், அந்தப் பெண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் உங்களுக்கு இரட்டித்த லாபம் கொடுக்கப்பட்டது என்பது போன்ற வரிகளைக் கொண்ட மெசேஜ் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பெண் ரூ. 2.7 கோடி ரூபாயை, மோசடி கும்பலின் பேங்க் அக்கவுண்டுக்கு அனுப்பியுள்ளார். ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை, இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் அந்த பெண்ணும் தான் மோசடி செய்யப்படுவதை உணராமல் பணத்தை அனுப்பியுள்ளார். ஒவ்வொரு முறை பணம் அனுப்பும் போதும் ஒரே வகையான மெசேஜ் வந்ததைப் பார்த்து சந்தேகம் அடைந்த அந்தப் பெண், விவரங்களைப் பற்றி தனது தோழியிடம் கூறியுள்ளார். அவர் எச்சரித்த பின்னரே அந்தப் பெண்ணுக்கு தான் ஏமாந்து கொண்டிருப்பது தெரிந்துள்ளது.
தான் ஏமாந்ததை உணர்ந்த பெண், உடனே 1930 என்ற எண்ணிற்கு அழைத்து தனக்கு நடந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த 1930 என்ற எண்ணிற்கு அழைக்கும் போது உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
விரைவாக புகார் அளித்ததன் காரணமாக மோசடி கும்பலின் மூன்று பேங்க் அக்கவுண்ட்களை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். நீதிமன்றம் அனுமதித்தால் ரூ. 1.7 கோடி திருப்பி தருகிறோம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கிட்டத்தட்ட 12615 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் சுமார் ரூ. 470 கோடி ரூபாய் வரை மக்கள், இது போன்ற மோசடி கும்பலால் இழந்துள்ளனர். இதில் வெறும் ரூ. 27.6 கோடியை அதாவது மொத்தத்தில் 5.5 சதவீத பணத்தை மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு திருப்பித் தர முடிந்தது என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
எனவே, ஆள் பேர் தெரியாத நபர்களிடம் சிக்கி இதுபோல் பணத்தை கொடுத்து ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பதை இந்தப் பதிவு சுட்டிக்காட்டுகிறது.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications