மும்பை: சமீப காலமாக ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் வழியாக என்னென்னவோ பார்முலாக்களைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்துள்ளது. அந்தப் பெண்ணிடம் ஓலா டிரைவர் ஒருவர் போலியான பேமெண்ட் ஸ்கிரீன் ஷாட்டை காட்டி தனக்கு பணம் அனுப்ப கூறி இருக்கிறார். நடந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்.
பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் வசிக்கும் பெண் ஒருவர் வில்சன் கார்டனுக்குச் செல்ல ஓலா கேபை முன்பதிவு செய்துள்ளார். அவர் அந்தப் பகுதியை அடைந்ததும் 5.1 கிலோமீட்டர் பயணத்திற்கு ரூ. 749 செலுத்துமாறு ஓலா கேப் டிரைவர் கேட்டுள்ளார். இது ஓலாவின் வழக்கமான விலை உயர்வுகளில் கூட ரூ. 500 அதிகரிப்பு இருக்காது என்பதை உணர்ந்த அந்த பெண், இந்த சம்பவம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என்று சிந்திக்கத் தொடங்கியுள்ளார்.

டிரைவரிடம் அந்தப் பெண் கட்டணத்தைப் பற்றி விசாரித்த போது, ஆச்சரியப்படுவது போல நடித்து அவருடைய தொலைபேசியில் இருந்த ஸ்கிரீன்ஷாட்-ஐ காட்டியுள்ளார். அதன் பின்பு உடனே பணம் கொடுத்துவிட்டு பின்னர் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தான் கூறிய தொகை உண்மை என்பதை காண்பிக்கும் விதமாக ஓலா டிரைவர் அவரது ஃபோனில் உள்ள ஸ்கிரீன்ஷாட்டையும் பெண்ணிடம் காட்டியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் அவருடைய ஃபோனை வாங்கி பார்க்கும் போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவர் காண்பித்தது போலி ஸ்கரீன் ஷாட் என்றும் பின்புலத்தில் ஓலா ஆப் ஓடிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. அடுத்த நிமிஷமே பணத்தை செலுத்தி விட்டு புகார் அளிக்க சொன்ன டிரைவருக்கு சாட்டையடி பதில் கொடுத்துள்ளார். ஸ்கிரீன் ஷாட்டில் கட்டணத்தை பார்ப்பதற்கு பதிலாக உங்களுடைய போன் ஆப்பில் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இது போன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல, இதே போல டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் டெல்லி ஏர்போர்ட் வரை செல்வதற்கு உபர் கேபை புக் செய்துள்ளார். ரூ. 340 கட்டணமாக செலுத்தும் படி இருந்துள்ளது. ஆனால் டிரைவர் அந்த நபரிடம் ரூ. 648 ரூபாய் செலுத்துமாறு கூறியுள்ளார். இரவு நேரம் என்பதால் அந்த நபரும் வேறு எதுவும் பேசாமல் கட்டணத்தை செலுத்தியுள்ளார். பொய் என்று தெரிந்த அந்த நபர் டிரைவரின் போனில் இருந்த ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துள்ளார். அதனை வைத்து பிறகு உபர் நிறுவனத்திடம் புகார் அளித்த பிறகு அவருக்கு ரீஃபண்ட் தொகையும் கிடைத்துள்ளது.
இது போன்ற மோசடி செய்யப்படுவதை தவிர்ப்பதற்கான ஒரு எளிய வழி ஆட்டோமேட்டிக் ஆன்லைன் கட்டணத்தை பயன்படுத்துவதாகும். இந்த நிறுவனங்களின் ஆப்களில் உள்ள வாலட்டுகளையும் பயன்படுத்தலாம். இது தானாகவே சரியான தொகையை கழித்து விடும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications