தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் கமாடிட்டி சந்தையில் காப்பர் அதிகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. காப்பர் விலை 2024ஆம் ஆண்டு மே மாதம் ஒரு டன் விலை 11104 டாலர் என்ற உச்சத்தைப் பதிவு செய்தது.
2 வருட இடைவெளியில் 2026ஆம் ஆண்டு ஜனவரியில் இதே ஒரு டன் காப்பரின் விலை 14,530 டாலராக உயர்ந்து பலரையும் வியக்க வைத்தது. இதன் பின்பு சில தடுமாற்றங்கள் ஏற்றப்பட்டாலும் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் இதே அளவைத் தொட்டது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றது.

தற்போது சுமார் 12,560 டாலராகச் சரிந்துள்ளது. தங்கம், வெள்ளி போல் அல்லாமல் காப்பர் என்பது முழுக்க முழுக்க தொழிற்துறையைச் சார்ந்தும், அதன் சப்ளை, டிமாண்ட் அடிப்படையிலும் விலை மாறுபடுகிறது.
இதேபோல் தங்கம், வெள்ளி விலை மீண்டும் பிப்ரவரி மாத அளவீட்டைத் தொடாத நிலையில் காப்பர் தொட்டு உள்ளது தனிச் சிறப்பு. இந்த நிலையில் சர்வதேச வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும் 2027ஆம் ஆண்டுக்குள் காப்பர் விலை அதிகப்படியாக 22000 டாலர் வரையில் உயரும் என கணித்துள்ளது.
இதில் முக்கியமாக யூபிஎஸ் 15500 டாலர் வரையிலும், கோல்டுமேன் சாக்ஸ் 15,400 டாலர் வரையிலும், டச்சீஸ் வங்கி 22,000 டாலர் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது.
இந்தியாவுக்குப் பெரிய பாதிப்பு
காப்பர் முழுக்க முழுக்க உற்பத்தித் துறையைச் சார்ந்தது என்பதால், உற்பத்தி அதிகம் செய்யும் நாடுகள் காப்பரை அதிகம் இறக்குமதி செய்யும். இதனால் காப்பர் விலை உயர்வு இந்தியாவுக்கு பெரும் பிரச்சனை. 2026ஆம் நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான காப்பர் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் இந்தியாவில் காப்பர் பயன்பாடு 21 லட்சம் டன்னாக உள்ளது, ஆனால் உள்நாட்டில் இதன் உற்பத்தி வெறும் 27,400 டன்னாக உள்ளது. எனவே, சர்வதேச காப்பர் விலை உயர்ந்தால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு அதிகரிக்கும்.
இதேவேளையில் காப்பர் விலை உயர்வால் இத்துறையைச் சார்ந்து நிறுவனங்களும் பலன் அடையும் என்பதால் ஹிந்துஸ்தான் காப்பர், ஹிண்டால்கோ, புதிதாகக் காப்பர் உற்பத்தியில் இறங்கியுள்ள அதானி எண்டர்பிரைசஸ் ஆகியவை காப்பர் விலை உயர்வால் பலன் அடையும். இதேபோல் காப்பர் கேபிள் மற்றும் வையர் நிறுவனங்களும் இதன் மூலம் பலன் அடையும்.
இதனால் உலோகமாக இருந்தாலும் சரி, பங்குகளாக இருந்தாலும் சரி உற்பத்தித் துறை வேகமாக வளர்ச்சி அடையும் பட்சத்தில் காப்பர் மற்றும் காப்பர் சார்ந்த முதலீட்டுக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது.


Click it and Unblock the Notifications