சென்னை: எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறதோ, அந்த அளவுக்கு ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற புதிய யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர். அதன் அடுத்த கட்டமாக தற்போது OTP இல்லாமலேயே, உங்களுடைய அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடும் யுக்தியை கண்டுபிடித்துள்ளனர். இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகை மோசடிகளில், வங்கியில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறி உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புவார்கள். நீங்கள் அந்த செய்தியில் உள்ள லிங்க்-கை கிளிக் செய்வதன் மூலம், உங்களுடைய அக்கவுண்ட்டில் இருந்து OTP இல்லாமல் பணத்தை திருடுகின்றனர். இந்த யுக்தியை பயன்படுத்தி பெங்களூரில் சுமார் ரூ. 40 லட்சத்திற்கு மேல் பணத்தை திருடியுள்ளனர்.

அதிநவீன ரிமோட் அக்சஸ் ட்ரோஜான்கள் (RAT) மற்றும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பேக்கேஜ் (APK) போன்ற மென்பொருளை பயன்படுத்தி சைபர் கிரிமினல்கள் மோசடியில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி விடுகின்றனர். RAT-கள் மற்றும் APK-கள் ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் ஒரு நபரின் தொலைபேசி அல்லது சிஸ்டத்தை தொலைவில் இருந்து கொண்டே கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
போலியான ஆப்: போலியான ஆப்-களை உருவாக்குவதற்கு தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளின் லோகோவைப் பயன்படுத்துகின்றனர். மோசடி செய்பவர்கள் இந்த ஆப்பின் லிங்கை வாட்ஸ்அப் அல்லது SMS மூலம் உங்களுக்கு அனுப்புவார்கள். நீங்கள் இந்த ஆப்-பை டவுன்லோட் செய்தவுடன். மோசடி செய்பவர்கள் எளிதில் உங்கள் பணத்தை திருடி விடுவார்கள்.
இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 35 வயது ITஊழியர் ரூ. 20 லட்சத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஊழியரின் வாட்ஸ் அப்பில் ஒரு லிங்க் வந்ததாகவும், அந்த லிங்க் அவருடைய வங்கியில் இருந்து வந்ததாக நினைத்து, அதனை கிளிக் செய்து ஒரு ஆப்-பை டவுன்லோடு செய்து உள்ளார். அவர் டவுன்லோட் செய்த பிறகு அவருடைய மொபைல் மோசடி செய்பவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. இதுபோன்ற மோசடிகள் மாநிலங்களில் எங்கு பார்த்தாலும் நடந்து கொண்டிருக்கிறது.
மோசடிகளில் இருந்து நீங்கள் தப்பிப்பதற்கு ஒரே வழி, SMS அல்லது வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருப்பது தான். வங்கியில் எந்த ஒரு தேவைக்காகவும் வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்ப மாட்டார்கள். மேலும் மொபைல் டேட்டாவை பயன்படுத்தாத நேரங்களில் OFF செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைலுக்கு SMS வந்தால் அது பேங்கில் இருந்து வந்ததா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
எனவே இது போன்ற ஃபிஷிங் லிங்குகள், உங்களுக்கு எந்த சமூக வலைத்தளங்கள் மூலமாக வேண்டுமானாலும் அனுப்பப்படலாம். முன்னதாக OTP மற்றும் பிற விவரங்கள் இருந்தால் தான் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படும் என்ற நிலை மாறி, தற்போது OTP தேவையும் தேவையில்லாமல் மாறிவிட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, இனி வரும் நாட்களில் மொபைல் பயன்படுத்தினாலும் சரி அல்லது லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தினாலும் சரி பாதுகாப்பாக இருப்பது முக்கியம். முடிந்த வரையில் உங்களுக்கு எந்த ஆப் தேவை என்றாலும், அவற்றை கூகுள் பிளே ஸ்டோரிலோ அல்லது ஆப் ஸ்டோரிலோ சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications