நம்மில் பெரும்பாலோர் உணவு, வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள், காலணிகள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யப் பழகிவிட்டோம். Amazon, Flipkart அல்லது Swiggy போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய சொந்த டெலிவரி சேவைகளைக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான வணிகங்கள் ஆன்லைன் ஆர்டர்களை அனுப்புவதற்கு இந்தியா போஸ்ட், டெல்லிவரி, DTDC அல்லது BlueDart போன்ற டெலிவரி சேவையை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற தளங்களைப் பயன்படுத்தி, தற்போது மோசடி செய்ய ஒரு கும்பல் இறங்கியுள்ளது. அதன் விவரங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தினமும் பல பொருட்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்வதால், ஒவ்வொரு பொருளையும் அதன் டெலிவரி நேரத்தையும் கண்காணிக்க முடியாது. இதனால் பல ஈ-காமர்ஸ் தளங்கள் ஒருமுறை உங்களுடைய அட்ரஸ் விவரங்களை கொடுத்து விட்டால் போதும், உங்களுடைய ஆர்டர்களை பதிவு செய்யும்போது அந்த அட்ரசையே கொடுத்து ஆர்டர் செய்துவிடலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் அனைத்து தகவல்களையும் என்டர் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இந்திய போஸ்ட் ஆபீஸ் SMS மோசடி: ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு போலியான மெசேஜ் வருகிறது. அந்த மெசேஜில் உங்களுடைய பேக்கேஜ் வேர்ஹவுஸில் இருக்கிறது. நாங்கள் 2 முறை டெலிவரி செய்ய முயற்சித்தோம். ஆனால் முழுமையான முகவரி தகவல் கிடைக்காத காரணத்தினால் டெலிவரி செய்ய முடியவில்லை. உங்கள் முகவரியை 48 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்யவும். அதனால் SMS-இல் உள்ள இணையதள இணைப்பைப் பயன்படுத்தி 12 மணி நேரத்திற்குள் உங்கள் முகவரியைப் புதுப்பிக்க வேண்டும் என்று அந்த SMS-இல் குறிப்பிட்டிருக்கும்.
இதனை நம்பி உண்மையிலேயே போஸ்ட் ஆபீஸ்-இல் இருந்து SMS வந்துள்ளது என்று நினைத்து மக்களும், தங்களுடைய சுய விவரங்களை அனுப்பி விடுகின்றனர். இதன் மூலமும் மோசடி கும்பல் மக்களின் பணத்தை அபகரிக்கின்றனர்.
உதாரணமாக நீங்கள் ஒரு ஈ-காமர்ஸ் இணையதளத்திலிருந்து வாஷிங் மெஷின், ஃபோன் கேஸ், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஷர்ட்டை ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் ஒவ்வொரு ஆர்டகளும் வெவ்வேறு டெலிவரி தேதிகளில் உள்ளன. அருகிலுள்ள இந்திய அஞ்சல் அலுவலகத்தின் மேலாளரால் உங்கள் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அது முழுமையடையாததால், உடனடியாக இணையதளத்தில் உள்ள இந்தியா போஸ்ட் ஆபீஸ் லிங்கை பயன்படுத்தி உங்கள் அட்ரஸ் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வரும்.
அதன் பின் அந்த இணையதளத்தில் உங்களுடைய வங்கி விவரங்களை என்டர் செய்யுமாறு கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் அட்ரஸை புதுப்பிப்பதற்கு ரூ. 80 அல்லது ரூ. 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கலாம். இது போன்ற தளங்களில் நீங்கள் உங்களுடைய சுய விவரங்களை என்டர் செய்வதனால், அவர்கள் அப்படியே அந்த தகவல்களை தெரிந்து கொள்ள கூடும்.
உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டு தகவலை என்டர் செய்யுது பணம் செலுத்துவதன் மூலம் நீங்கள் மோசடியில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
நீங்கள் எந்த ஒரு பொருளை ஆர்டர் செய்யும் போதும் அந்த அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே உங்களுடைய அட்ரஸ் விவரங்களை கொடுத்து விடுவீர்கள். எந்த ஒரு உண்மையான நிறுவனமும், உங்களிடம் இது போன்ற தகவல்களைக் கேட்காது. மேலும் யாரேனும் உங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டால் அவர்களுடன் எச்சரிக்கையாக இருங்கள்.
More From GoodReturns

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications