LPG கேஸ் சிலிண்டர் பெயரில் நடக்கும் புது மோசடி..!! பொதுமக்களே எச்சரிக்கை..!!

ஈரான் போர் தொடங்கிய பிறகு இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனை அடுத்து இந்த இரண்டு மாத காலமாக மக்கள் அதிகமாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் தான் இருக்கிறது. ஈரான் போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி விநியோகம் நின்று போனது. இதனால் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது.

முதல் கட்டமாக உணவகங்கள், ஆலைகளுக்கான எல்பிஜி விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டது அதேவேளையில் உணவுகளின் விலைகளும் உயர்த்தப்பட்டன. வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரியிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. சிலிண்டர் புக்கிங் செய்வதற்கான கால இடைவெளி 21 நாட்களாக இருந்து நகர்ப்புறங்களுக்கு 25 நாட்களாகவும் கிராமப்புறங்களுக்கு 45 நாட்களாகவும் மாற்றி அமைக்கப்பட்டது.

LPG கேஸ் சிலிண்டர் பெயரில் நடக்கும் புது மோசடி..!! பொதுமக்களே எச்சரிக்கை..!!

அதேபோல வாடிக்கையாளர்கள் கேஒய்சி முடித்திருக்க வேண்டும் இல்லை என்றால் சிலிண்டர் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போதைக்கு ஓரளவு நிலைமை சீராகி இருக்கிறது. ஆனால் இந்த கேஸ் சிலிண்டர் பிரச்சனையை மையமாகக் கொண்டு ஒரு புதிய மோசடி நாடு முழுவதும் நடைபெறுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

வீட்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கக் கூடிய வாடிக்கையாளர்கள் கேஒய்சி அப்டேட் செய்யப்படுவது கட்டாயம். கேஒய்சி அப்டேட் செய்யப்படவில்லை என்றால் சிலிண்டர் கிடைக்காது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் தான் உங்கள் எல்பிஜியில் கேஒய்சி அப்டேட் செய்யப்படவில்லை குறைந்த ஸ்டாக்கே உள்ளது உடனே அப்டேட் செய்து ஆர்டர் செய்யுங்கள் என பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் மோசடியாளர்கள் மெசேஜ் அனுப்பு தொடங்கி இருக்கிறார்கள்.

இத்துடன் ஒரு லிங்கினையும் அனுப்புகிறார்கள். இதனை கிளிக் செய்தால் நம்முடைய மொபைல் போனில் இருக்கக்கூடிய அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடுவதாக சொல்லப்படுகிறது. இன்னும் உங்களது எல்பிஜியை ஆதார் உடன் இணைக்கவில்லை உடனே அப்டேட் செய்யுங்கள், எல்பிஜி கனெக்சன் தொடர வேண்டுமென்றால் உடனே பேமென்ட் செய்யுங்கள், kyc யை இந்த லிங்கை கிளிக் செய்து அப்டேட் செய்யுங்கள் என பல்வேறு மோசடியான மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

எல்பிஜி இணைப்புக்கு நீங்கள் வழங்கி இருக்கக்கூடிய மொபைல் எண்களை குறி வைத்து இந்த மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. இந்த லிங்கனை கிளிக் செய்தால் நம்முடைய மொபைல் போன் போனில் இருக்கக்கூடிய முக்கியமான தகவல்கள் அனைத்தும் மோசடியாளர்கள் வசம் சென்று விடுகிறது. எனவே டெல்லி , தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில காவல்துறையினரும் பொதுமக்கள் இது போன்ற எந்த ஒரு மெசேஜையும் கவனத்தில் கொள்ள வேண்டாம் என்றும் அதில் வரக்கூடிய லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

கேஒய்சி அப்டேட் குறித்து சந்தேகம் இருந்தால் நேரடியாக கேஸ் ஏஜென்சிக்கு சென்று அதனை உறுதி செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். மேலும் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு வழக்கமாக நீங்கள் என்னென்ன நடைமுறைகளை பின்பற்றுவீர்களோ அவற்றை மட்டுமே பின்பற்றுங்கள் என்றும் மெசேஜ்களிலோ வாட்ஸ் அப்களிலோ வரக்கூடிய லிங்கங்களை கிளிக் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+