மும்பை: இணைய மோசடிகள் பலவிதத்தில் நடக்கின்றன. அதில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து சம்பாதிக்க முடியும் என்று கூறி ஏமாற்றுவது தான்.. தற்போதைய ட்ரெண்ட். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் இதுபோன்ற மோசடியில் சிக்கி ரூ. 54 லட்சத்தை இழந்துள்ளார்.
சில நாட்களாக இணைய மோசடிகள் அதிகரித்துள்ளது. அதிலும் சிலர் வீட்டில் இருந்தே ப்ராஜெக்ட் எழுதிக் கொடுக்கச் சொல்லி ஏமாற்றுவது, சில PDFகளைப் பார்த்து அப்படியே டைப் செய்து தர வேண்டும் என்று கூறி மோசடி செய்வது போன்ற பல சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் கூட சில கும்பல் ஆன்லைனில் டைப்பிங் செய்து கொடுத்தால் குறிப்பிட்ட ரூபாய் தருவதாகக் கூறி மோசடி செய்து வந்தனர்.

இந்த வேலைகளில் சேர்வதற்கு, பணம் கட்ட வேண்டும் என்று கூறியும் கொள்ளையடித்தனர். இதனை அறியாத சிலர் இன்றளவும், அவர்களின் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். தினம்தோறும் இது போன்ற ஒரு செய்தியாவது, நாம் இணையத்திலும், சோசியல் மீடியா பக்கங்களிலும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆனாலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால், இது போன்ற மோசடிகளில் சட்டென விழுந்து விடுகின்றனர்.
அதற்குச் சான்றாக, மகாராஷ்டிரா மாநிலம் ஐரோலியைச் சேர்ந்த பெண் ஒருவர், மோசடியில் சிக்கி ரூ. 54 லட்சத்தை இழந்துள்ளார். போலீசாரின் கூற்றுப்படி 37 வயதான பெண், தனது மகப்பேறு விடுப்பில் இருந்துள்ளார். இதனால் ஆன்லைனில் ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதிக்கும் வழியைத் தேடிக் கொண்டே இருந்துள்ளார். அவர் தேடலின் போது சில நபர்களை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அவர்களும் அப்பெண்ணுக்கு ஃப்ரீலான்ஸ் வேலை கொடுப்பதாக நம்ப வைத்து ஆசை வார்த்தைக் காட்டியுள்ளனர். அதனை நம்பிய அந்தப் பெண் அவர்கள் கொடுத்த வேலை வாய்ப்பை ஏற்றுக்கொண்டு வேலை செய்ய தொடங்கியுள்ளார்.
அவர்கள் குறிப்பிட்ட டாஸ்க்-ஐ செய்து முடிக்க கூறியுள்ளனர். பிறகு கட்டாயமாக சம்பளம் தருவதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மோசடிக்காரர்கள் அந்தப் பெண்ணிடம் முதலீடு செய்யும்படி கூறியுள்ளனர். அவ்வாறு முதலீடு செய்தால் அதிக வருமானம் பெற முடியும் என்று கூறி ஏமாற்றியுள்ளனர். அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு இணங்க, அப்பெண்ணும் பல்வேறு கணக்குகளில் இருந்து ரூ. 54,30,000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
இந்த மோசடி சம்பவம் மே 7ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் நடந்துள்ளது. எல்லா வேலைகளையும் முடித்த பின்னர், அந்தப் பெண் மோசடிக்காரர்களுக்கு கால் செய்து கேட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் இருந்து எந்த விதமான அழைப்பும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டு அந்தப் பெண், மும்பையில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆன்லைனில் வேலை செய்தால் பணம் தருவதாகக் கூறி ஏமாற்றுவதை எடுத்துக்காட்டுகிறது இந்த சம்பவம். எந்த ஒரு தொழில் வழங்கும் நிறுவனங்களும் உங்களிடம் இருந்து எந்த தொகையையும் முதலீடு செய்ய சொல்வதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் உண்மையில் செயல்படுகிறதா.. என்பது போன்ற விவரங்களையும், ஆன்லைனில் தேடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு சில விஷயங்கள் தெரிய வரலாம்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications