சென்னை: சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயது தொழிலதிபர், பங்கு வர்த்தக மோசடியில் சிக்கி ரூ. 1.88 கோடியை இழந்துள்ளார். இது எப்படி நடந்தது, இது போன்ற விஷயங்கள் உங்களுக்கு நடக்காமல் இருக்க.. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆள் பெயர் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது மற்றும் பண பரிவர்த்தனை செய்யக்கூடாது என என்னதான் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தாலும், ஏமாறும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதனை நிரூபிக்கும் பொருட்டு ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு நடந்துள்ளது.

தற்போது இணையதளங்களில் வெளிவரும் பல மோசடி தொடர்பான செய்திகள் டெலிகிராம் குரூப் அல்லது வாட்சப் குரூப்புகளை மையப்படுத்தி தான் இருக்கிறது. இந்த மோசடியும் அப்படித்தான் நடந்துள்ளது. மோசடி செய்த கும்பல், இந்த 48 வயது தொழிலதிபரை ஒரு வாட்சப் குரூப்பில் சேரும்படி அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அந்த வாட்சப் குரூப்பில் புகழ்பெற்ற நிதி மேலாளர்களைக் கொண்டு நிதி ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அது போலி என்று தெரியாத அந்த தொழிலதிபர், அதனைக் கண்டு ஈர்க்கப்பட்டு, அவர்கள் சொல்வதற்கு எல்லாம் இணங்கியுள்ளார். மோசடி செய்யும் கும்பலின் ஆலோசனைப்படி Zoksa என்ற செயலியை அந்த தொழிலதிபர் தன்னுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
இதில் முதலீடு செய்வதன் மூலம் நிறைய வருமானம் கிடைக்கும் என்று கூறியதை நம்பிய அவர், அதில் தொடர்ந்து நிதியை முதலீடு செய்துள்ளார். பல மோசடிக்காரர்களும் செய்யும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்களுடைய ஆப்பில் போலியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வருமானம் வருவது போல காண்பிப்பது தான். இதனை நம்பி அந்த தொழிலதிபரும், தொடர்ந்து முதலீட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அவர் சுமார் ரூ. 1.88 கோடியை இழந்துள்ளார்.
மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பது எப்படி?:
1) பாஸ்வேர்ட் மற்றும் OTPகள் போன்ற முக்கியமான விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
2) சந்தேகத்திற்கு இடமான லிங்க்குகளை கிளிக் செய்வதையோ அல்லது மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளைத் திறந்துப் பார்ப்பதையோ தவிர்க்கவும். ஏனெனில் அவை பிஷ்ஷிங் தளங்கள் அல்லது மோசடிக்காரர்களின் இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லலாம்.
3) நீங்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும்படி பாஸ்வேர்ட் அமைப்பதற்கு பதிலாக நம்பர் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்களோடு பாஸ்வேர்டை உருவாக்கவும்.
4) ஆள் பேர் தெரியாத நபர்களிடமிருந்து, உங்களுக்கு கால் வந்தால் அவற்றை அறிந்து செயல்படவும்.
5) யாருடனும் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களைப் பகிர வேண்டாம். அது போல் ஆன்லைன் மூலம் நட்பான நபர், ஏதேனும் ஆப்களைப் பதிவிறக்க சொன்னால், அவற்றின் ரிவ்யூக்களைப் பார்த்து படித்துவிட்டு, ஏன் அதை பதிவிறக்க சொல்கிறார் என்பதைச் சிந்தித்து, அதன் பிறகு பதிவிறக்கவும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications