பெங்களூரு: டிசைன் டிசைனா யோசிச்சு, மோசடி செய்யும் கும்பல் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. என்னதான், தொடர்ந்து அறிவிப்புகள், எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், ஏமாறும் நபர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். மேலும் ஒரு மோசடி சம்பவம் பெங்களூரைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்துள்ளது. இதனால் அவர் ரூ.18 லட்ச ரூபாயை இழந்து உள்ளார். இந்த மோசடி எப்படி நடந்தது என்பதைப் பார்ப்போம்.
பெங்களூரைச் சேர்ந்த 45 வயது பெண் சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஸ்கிராட்ச் கார்டு லாட்டரி ஸ்கேம்-இல் சிக்கி ரூ. 18 லட்ச ரூபாயை இழந்துள்ளார். ஸ்க்ராட்ச் கார்டு பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நாம் சிறுவயதில் கடைகளில் இந்தக் ஸ்க்ராட்ச் கார்டுகளைப் பார்த்திருப்போம். ரூ. 1 ரூபாய்க்கு ஸ்க்ராட்ச் கார்டுகளைப் பெற்று, அவற்றை ஸ்க்ராட்ச் செய்து பார்த்தால் அதில் ஏதேனும் நம்பர் அல்லது ஸ்டார் சிம்பல் குறிப்பிடப்பட்டிருக்கும். ஸ்டார் விழுந்தால் பரிசு கிடையாது. அதுவே நம்பர், ஏதேனும் விழுந்தால் அட்டையில் இருக்கும் பொருட்களின் நம்பருக்கு ஏற்றவாறு பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

இது போன்ற நம் செயலுக்காக பலமுறை நம் பெற்றோர்களிடம் திட்டு வாங்கிய கதைகளும் இருக்கும். ஆனால் 48 வயதான சஞ்சனா என்ற பெண் இது போன்ற ஸ்கிராட்ச் கார்டு லாட்டரி ஸ்கேமில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். சஞ்சனாவுக்கு இகாமர்ஸ் தளத்திலிருந்து ஒரு ஸ்க்ராட்ச் கார்ட் மற்றும் அதனை பயன்படுத்தும் விளக்கத்துடன் ஜனவரி 28ஆம் தேதி ஒரு லெட்டர் வந்துள்ளது.
டெக்கன் ஹெரால்டு, தரவுகளின் படி சஞ்சனாவும் அந்த ஸ்கிராட்ச் கார்டை ஸ்க்ராட்ச் செய்து பார்த்துள்ளார். அதில் சஞ்சனா 15.51 லட்சத்தை வென்றதாக இருந்துள்ளது. அதன் பிறகு மோசடிக்காரர்களிடமிருந்து, சஞ்சனாவுக்கு ஒரு கால் வந்துள்ளது. மோசடிக்காரர்கள் தாங்கள் கர்நாடகாவில் இருந்து அழைப்பதாகக் கூறி சஞ்சனாவிடம் பேசியுள்ளனர்.
மோசடிக்காரர்கள் கர்நாடகாவில் லாட்டரி, குலுக்கல் போன்றவை சட்டவிரோதமானவை என்பதால் லாட்டரி தொகையில் 4 சதவீதத்தை பெற முடியாது என்றும், 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
சஞ்சனாவும் வரித் தொகையை செலுத்த சம்மதித்து பணத்தை மோசடிக்காரர்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளார். லாட்டரியில் இருந்து பணம் வரும் அதனைக் கொண்டு, நாம் செலுத்தும் வரியை ஈடு செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் சஞ்சனாவும் மோசடி செய்பவர்களின் வங்கிக் கணக்குக்கு ரூ. 18,40,168 ரூபாயை அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு மோசடிக்காரர்களிடமிருந்து, எந்த ஒரு அழைப்பும் சஞ்சனாவுக்கு வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சஞ்சனா, சைபர் கிரைம் போலீசாருக்கு மே 7ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
இது போன்ற மோசடிகள் தொடர்ந்து நடக்காமல் இருக்க வேண்டுமானால், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். தொடர்ந்து மோசடி தொடர்பான செய்திகளை படிப்பதன் மூலம் எச்சரிக்கையாக இருங்கள். பேராசை பெரு நஷ்டத்தை விளைவிக்கும் என்பதற்கு பெங்களூர் சம்பவம் மற்றொரு எடுத்துக்காட்டு.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications