சென்னை: நாளுக்கு நாள், புதுசு புதுசா ஐடியாவை அறிமுகப்படுத்தி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. சிலர் தாங்கள் CBI அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு மோசடி செய்து கொண்டிருக்கின்றனர். மறுபுறம் கொரியர் நிறுவனத்திலிருந்து போதைப்பொருள் வந்ததாகக் கூறி மோசடி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் உங்கள் பேங்க் அக்கவுண்டில் பணம் வரவு வைக்கப்பட்டதாக SMS அனுப்பி மோசடி செய்கின்றனர். அவ்வாறு நீங்கள் பெரும் SMS உண்மையில் உண்மைதானா.. அல்லது மோசடி கும்பலின் யுக்தியா.. என்பதை கண்டுபிடிப்பதற்கான வழிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தோற்றமளிக்கும் SMS உங்களுக்கு வரலாம். ஆனால் சிலருக்கு உண்மையாகவே பணம் வரவு வைக்கப்படலாம். இதனை தெரிந்துகொள்ள அனுப்புபவரின் ஐடியை சரி பார்க்கவும். ஏனெனில், வங்கிகள் SMS அனுப்ப தனிப்பட்ட மொபைல் எண்களைப் பயன்படுத்தாது.

சான்றாக ICICI பேங்க் என்றால் AD-ICICIT போன்ற ஐடியை கொண்டு மெசேஜ்களைப் பெறுவீர்கள். இதுபோல ஒவ்வொரு பேங்குக்கும், ஐடி மாறுபடும். இது போன்ற ஐடி அல்லாமல் தனிநபரின் மொபைல் எண்ணில் இருந்து SMS வந்தால் அது போலியானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அப்பொழுது உண்மையிலேயே யாராவது பணம் அனுப்பினால் தனிநபரின் மொபைல் நம்பரில் இருந்து தானே வரும் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது.. இதுதான் பல பேருக்கு இருக்கும் சந்தேகம். உங்கள் வங்கிக் கணக்கில் உண்மையிலேயே பணம் வரவு வைக்கப்பட்டால், வங்கியின் மூலம் நீங்கள் SMS பெறுவீர்கள். தற்போது அனைவரிடமும் G-Pay உள்ளது. நோட்டிபிகேஷன்-ஐ ஆன் செய்து வையுங்கள். இதன் மூலம், உங்களுக்கு பணம் வரவு வைக்கப்பட்டால் நோட்டிபிகேஷன் மெசேஜ் வரும். அதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இல்லையென்றால், உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ சென்று உங்களுடைய பேங்க் அறிக்கையை சரி பார்க்கவும். அதில் ஏதேனும் தொகை வரவு வைக்கப்பட்டிருந்தால் நீங்கள் விட்டுவிடலாம். ஆனால் மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு எந்தத் தொகையும் உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால் அது போலியானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுதெல்லாம் வங்கிகளின் வாடிக்கையாளர்களை ஏமாற்ற SMS ஃபிஷிங் பயன்படுத்தப்படுகிறது. முதலில் மோசடி கும்பல் பணம் வரவு வைக்கப்பட்டது போல உங்களுக்கு SMS அனுப்புகின்றனர்.
அதன் பிறகு மோசடி கும்பலில் இருந்து உங்களுக்கு ஒரு கால் வரும். அந்தக் காலில், தெரியாமல் அதிக அளவிலான தொகை, உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதனை நீங்கள் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கூறுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட UPI ஐடிக்கு பணத்தைத் அனுப்ப சொல்லலாம்.
இதில் தந்திரம் என்னவென்றால் பணம் டெபிட் செய்யப்படும்போது அல்லது உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் போது வங்கிகள் வழக்கமாக அனுப்பும் செய்திகளைப் போலத்தான் இந்த மெசேஜ்களும் உள்ளது. முதலில் பார்க்கும்போது அவை வங்கியில் இருந்து வந்த செய்தியாகக் கூட தோன்றலாம். சான்றாக கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைப் பாருங்கள்.
"Rs 15,000 credited to a/c XXXXX9082 on 10-05-24 by a/c linked to VPA XXXX9082 (UPI Ref No 41356463189."
இது போன்ற மெசேஜ்களை அனுப்பியவர் யார் என்று சரி பார்த்தால், அடிக்கடி மொபைல் நம்பர் தான் கிடைக்கும். பேங்குகள் ஒருபோதும் மொபைல் நம்பரில் இருந்து மெசேஜ்களை அனுப்புவதில்லை. இது மோசடி கும்பலின் யுக்தி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications