சென்னை: இணையதள மோசடி அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ. 23.5 லட்சத்தை ஏமாற்றியதாக, டெல்லியை சேர்ந்த முகமது தாவூத் என்ற 29 வயது இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடி எப்படி நடந்தது?: பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்கும் என்று முகமது தாவூத் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதனைப் பார்த்து, தானும் அதே போல் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணிய டெல்லியைச் சேர்ந்த 32 வயது பெண் முகமது தாவூதைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தாவூத், அந்தப் பெண்ணிடம், முதலில் ரூ. 1,000 ரூபாய் முதலீடு செய்யும்படி கூறியுள்ளார்.

இதனை ஏற்ற அந்தப் பெண் ரூ. 1,000 ரூபாயை முதலீடு செய்துள்ளார். அதற்குப் பிறகு அவருக்கு ரூ. 1,300 ரூபாயாக திரும்பக் கிடைத்துள்ளது. இந்த சிறிய வெற்றி மேலும் அப்பெண்ணை பெரிய தொகையை முதலீடு செய்ய தூண்டியுள்ளது. மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்தியை அறியாத அந்தப் பெண், வெவ்வேறு வங்கி கணக்குகளில் இருந்து அதிக அளவிலான தொகையை தொடர்ந்து தாவூத் அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளார். போலீஸ் விசாரணையில் சுமார் 11 வங்கி கணக்குகளில் இருந்து தாவூத் அக்கவுண்டிற்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் தொடர்ந்து ரூ. 23 லட்சத்தை தாவூத் அக்கவுண்டிற்கு அந்தப் பெண் அனுப்பியுள்ளார். ஏப்ரல் 10ஆம் தேதி, தான் ஏமாற்றப்பட்டதை கூறி,அப்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் டெல்லி போலீசார், தாவூத்-ஐ கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் போது 17 சிம் கார்டு, 11 டெபிட் கார்டுகள், 4 பாஸ்புக், 15 செக் புக், மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். மோசடி செய்யப்பட்ட தொகையின் ஒரு பகுதியாக ரூ. 8.55 லட்சத்தை தாவூத்தின் வங்கி கணக்கில் இருந்து போலீசார் கண்டுபிடித்தனர். மீதமுள்ள பணம் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
பங்குச்சந்தை முதலீட்டு மோசடிகள், இந்தியாவில் பல பகுதிகளில் நடக்கின்றன. கடந்த சில மாதங்களில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நபர்கள், இதுபோன்ற மோசடிக்கு பலியாகி அதிக அளவிலான தொகையை இழந்துள்ளனர். உதாரணமாக, ஏப்ரல் மாதம், ஜெயநகரில் உள்ள தொழிலதிபர் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் சிக்கி ரூ. 5.2 கோடியை இழந்தார். அதேபோல, மார்ச் மாதம் பூனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடியில் ரூ. 24.12 லட்சத்தை இழந்தார்.
இந்த இரண்டு மோசடிகளுமே அங்கீகரிக்கப்படாத மொபைல் போன் அப்ளிகேஷன் மூலம் நடந்துள்ளன. தற்போது மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் ஒருவித யுக்திகளில் இதுவும் ஒன்று.
அதுவும் இப்பொழுதெல்லாம் நடக்கும் மோசடிகள் ரூ. 1,000, ரூ. 2,000 என சிறிய அளவிலான தொகைகளில் கிடையாது. ரூ. 10 லட்சம் முதல் சிலர் ரூ. 5 கோடி வரை இழந்துள்ளனர். ஆர்பிஐ தொடர்ந்து ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருப்பதைப் பற்றி கூறி வருகிறது. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகிறது. ஆனால் மோசடிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. விவரம் தெரியாதவர்கள் சிறிய அளவிலான தொகையை ஏமாந்த வழக்குகளும் உள்ளன. இது கூட பரவாயில்லை. ஆனால் படித்த நபர்களே, இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்கித் தவிப்பது தான் இன்னும் வேதனை.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications