நாம் கடந்து வந்த பாதையை பார்க்கும் போது தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் முன்பை விட தற்போது அனைத்தும் எளிதாகி விட்டது. கற்பனைக்கு எட்டாத தூரம் வரை வளர்ச்சியின் போக்கு தான் தென்படுகிறது. இருப்பினும் தொழில்நுட்ப வசதி எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறதோ, அதேபோல அது தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்துவிட்டன.
அந்த வகையில் சமீப நாட்களில் ஒரு புதிய மோசடி பிரபலமடைந்து வருகிறது. இது இந்திய மக்களை குழப்பம் அடையச் செய்து, பல்லாயிரக்கணக்கான ரூபாயை இலக்கச் செய்கிறது. இந்த புதிய மோசடியின் பெயர் தான் "டிஜிட்டல் அரெஸ்ட்". எனவே ஒன் இந்தியா மற்றும் குட் ரிட்டர்ன்ஸ் ஆகியவை இணைந்து குடிமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன?: சிபிஐ ஆபீசர் அல்லது போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு அழைப்பு விடுத்து பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டி, அரெஸ்ட் வாரண்ட் மற்றும் விசாரணை மூலம் பயமுறுத்தி மக்களின் பணத்தை அபகரிப்பது தான் டிஜிட்டல் அரஸ்ட். இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் ஆன்லைனிலேயே முடித்து விடுகின்றனர்.
டிஜிட்டல் அரஸ்டின் முக்கியமான யுக்தி என்னவென்றால் செய்யாதத் தவறை செய்ய வைத்ததாக நம்ப வைத்து பணம் பறிப்பது தான். இதனால் அப்பாவி பொதுமக்கள் தங்களுடைய சொத்துக்களை இழந்து தவித்து வருகின்றனர். தன்னிடம் சிபிஐ அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு சில போலி அதிகாரிகள் பேசியதாகவும், போலியான உச்ச நீதிமன்றம் விசாரணையை நடத்தும் அளவிற்கு செட்டப்பை செய்ததாகவும், இதனால் 7 கோடி ரூபாயை மாற்றுமாறு அழுத்தம் கொடுத்து, தானும் இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததாக தெரிவித்திருக்கிறார்.
இந்த மோசடியாளர்கள் தொழிலதிபர்கள், பெண்களை மட்டும் குறி வைக்காமல் சம்பளம் வாங்கும் நபர்களையும் குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 2023-ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 30,000 கோடி சைபர் மோசடிகளால் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2024-ஆம் நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் 7,40,000 புகார்கள் வந்துள்ளது. மேலும் ரூ.1,750 கோடியை மக்கள் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய மோசடிகளின் ஆபத்தை குறைப்பதற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு வங்கிகளையும் தங்களுடைய ஆன்லைன் டிஜிட்டல் பேமென்ட் தளங்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அறிவுறுத்தி வருகிறது.
மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?: உங்களுக்கு ஈமெயில் அல்லது எஸ்எம்எஸ்-களில் அனுப்பப்படும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை கிளிக் செய்யாமல் இருங்கள். உங்களுடைய வங்கி விவரங்கள், பாஸ்வேர்ட் போன்றவற்றை பத்திரமாக வைத்திருங்கள். யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
உறவினர்களின் பெயர், உங்களுடைய பிறந்த தேதி, "1234" போன்ற நம்பர் ஆகியவற்றை பயன்படுத்தாமல் நம்பர்கள், லெட்டர்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்கள் போன்றவை இருப்பதை உறுதி செய்து பாஸ்வோர்ட் அமைத்துக் கொள்ளுங்கள்.
டிஜிட்டல் பேமென்ட் தளங்களை பயன்படுத்தும் போது வங்கியின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன்களை பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எப்பொழுதுமே அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்யும்போது கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரபூர்வ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களின் மூலம் டவுன்லோட் செய்வது ஆபத்தை விளைவிக்கலாம். கடைசியாக உங்களிடம் நீங்கள் செய்யாத தவறு செய்ததாக கூறி யாரேனும் மிரட்டினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications