இந்தியாவில் உணவு பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரியும், பருவமழை பொய்த்த காரணத்தால் தக்காளி, வெங்காயம் முதல் அரிசி, பருப்பு வரையில் மக்கள் தினசரி பயன்படுத்தும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய அரசு 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் கோதுமை மாவு-ஐ ஒரு கிலோ வெறும் 27.50 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதை எங்கு வாங்குவது..?

பாரத் ஆட்டா விற்பனையின் சோதனை ஓட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு நாடு முழுவதும் வெங்காயம், பருப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கோதுமை மாவு விற்பனையைத் துவங்கியுள்ளது.
மத்திய அரசு இந்த மலிவு விலை கோதுமை மாவு விற்பனையை NAFED, NCCF மற்றும் கேந்திரிய பந்தர் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களும் அதன் கீழ் இருக்கும் அமைப்புகள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த 3 அமைப்புகள் கீழ் 800 நடமாடும் கடைகள் (வேன்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது) மற்றும் 2,000 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதில் NCCF அமைப்பின் கீழ் தமிழ்நாடு அரசு நுகர்வோர் கூட்டுறவு அமைப்பும் உள்ளதால் மத்திய அரசு NAFED, NCCF மற்றும் கேந்திரிய பந்தர் ஆகிய 3 கூட்டுறவு நிறுவனங்களும் ஒதுக்கப்பட்ட 2.5 லட்சம் டன் கோதுமையை அரைத்துப் பாக்கெட் செய்து விநியோகம் செய்யும்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு 70 ரூபாய் வரையில் விற்கப்படும் வேளையில் மத்திய அரசு விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையை இந்த 3 அமைப்புகள் வாயிலாக அரைத்துப் பாக்கெட் செய்து விற்கப்படுகிறது.
மத்திய அரசு ஜூலை மாதம் 'பாரத் பருப்பு' என்ற பெயரில் ஒரு கிலோ பருப்பை 60 ரூபாய்க்கு விற்கும் திட்டம் அறிமுகம் செய்தது. இது தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கும், நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் வாயிலாக மக்களிடம் சேர்க்கப்பட்டது.
இதே முறையின் கீழ் தற்போது கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு துவங்கியுள்ளது. விலைவாசி உயர்வின் சுமையைப் பண்டிகை காலத்தில் குறைக்கும் பொருட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது, இனிப்பு முதல் உணவு வரையில் மக்களின் முக்கிய உணவுப் பொருட்கள் தேவையில் கோதுமை மாவு இந்தத் தீபாவளி பண்டிகையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications