இந்திய மக்களின் முக்கிய உணவான அரிசி விலை தாறுமாறாக உயர்ந்து, இரட்டை இலக்க பணவீக்கத்தைக் கொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு அரசியின் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் படி மத்திய அரசு இனி பாரத் பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்கும் என்று மூத்த அரசு அதிகாரி கூறியதாக ஈடி பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பாரத் பிராண்டின் கீழ் கோதுமை மாவு மற்றும் பருப்பு ஆகியவற்றை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது அரிசி விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டு உள்ளது.

இந்தியத் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Nafed), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே உணவு பணவீக்கத்தைக் குறைக்கும் திட்டத்துடன் மிகவும் குறைந்த விலையில் கோதுமை மாவு மற்றும் பருப்பு வகைகளைப் பார்த் பிராண்டின் கீழ் விற்பனை செய்தது.
நவம்பர் மாதம் தானிய வகைகளின் விலை 10.27% உயர்ந்துள்ளது, உணவுப் பணவீக்கம் நவம்பரில் 8.70% ஆக இருந்தது, முந்தைய மாதத்தில் 6.61% ஆக இருந்தது. உணவுப் பணவீக்கம் ஒட்டுமொத்த நுகர்வோர் நிதி நிலையைப் பாதிக்கும் காரணத்தால் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்பு மக்களின் அடிப்படை பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்கும் முடிவு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) செய்த இணைய-ஏலத்தின் மூலம் வெளிச் சந்தைக்குச் செல்லும் கோதுமை அளவை அதிகரிப்பதன் மூலம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. 2024 பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் அரசுக்கு உணவுப் பொருட்கள் மீதான உயர் பணவீக்கம் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தக்க முடிவை எடுத்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications