பார்தி ஏர்டெல், இந்தியாவின் மிகப்பெரிய DTH சேவை வழங்குநரான டாட்டா பிளேவை கையகப்படுத்த டாட்டா குழுமத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டாட்டா பிளே தற்போது நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த நடவடிக்கை ஏர்டெல்லின் டிஜிட்டல் டிவி பிரிவில் அதன் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OTT சேவைகளில் அதிகரிக்கும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், ஏர்டெல் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை நிறைவேறினால், ஏர்டெல் டிஜிட்டல் tv பிரிவில் தனது ஆதிக்கத்தைத் தொடரும். 2017-ஆம் ஆண்டு பார்தி ஏர்டெல், டாட்டாவின் கன்ஸ்யூமர் மொபிலிட்டி பிசினஸை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் அது இரண்டாவது குறிப்பிடத்தக்க ஒப்பந்தமாக இருக்கும்.

20.77 மில்லியன் சந்தாதாரர்கள் மற்றும் 32.7% சந்தைப் பங்கு ஆகியவற்றைக் கொண்ட டாட்டா பிளே சந்தையில் முன்னணி வகித்தாலும், தற்போது நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. டாட்டா பிளேவின் நிகர இழப்பு 2024-ஆம் நிதியாண்டில் ரூ. 353.8 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. ஏர்டெல் டிஜிட்டல் டிவி இழப்புகளை பதிவு செய்தாலும், 27.8% சந்தைப் பங்கு மற்றும் சமீபத்திய காலாண்டுகளில் சந்தாதாரர்களின் அதிகரிப்புடன் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
வெளியான அறிக்கையின்படி டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்களில் உள்ள சந்தாதாரர்கள் டிடிஹெச்-க்கு பதிலாக OTT சேவைகளுக்கு மாறி வருகின்றனர். மேலும் கிராமப்புற சந்தாதாரர்கள் அதிக அளவில் தூர்தர்ஷனின் இலவச டிஷ்களை தேர்ந்தெடுக்கின்றனர். அதே வேளையில் பிற மலிவான ஆன்லைன் மாற்றுக்களுக்கும் மாறி வருகின்றனர்.
டாட்டா பிளேயின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது, சமீபத்தில் $1 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது பெருந்தொற்றுக்கு முன் $3 பில்லியனாக இருந்தது. தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.
டாட்டா சன்ஸ் தற்போது சிங்கப்பூரின் டிமாசெக் ஹோல்டிங்ஸின் பங்கை ஏப்ரல் மாதம் ரூ. 835 கோடிக்கு கையகப்படுத்திய பின்னர் டாட்டா பிளேயின் 70% பங்கை வைத்திருக்கிறது. வால்ட் டிஸ்னி மீதமுள்ள 30% பங்கை வைத்திருக்கிறது, ஆனால் டிவி விநியோகத் துறையிலிருந்து வெளியேற முயற்சி செய்து வருகிறது என்று அறிக்கை கூறுகிறது.
ஏர்டெல் நிறுவனத்திற்கு இந்த கையகப்படுத்துதல் பொருத்தமாக இருந்தாலும், இதில் சவால்களும் உள்ளன. ஏனெனில் டாட்டா பிளேவுக்கு நிலுவையில் உள்ள உரிமேக் கட்டண பொறுப்புகளும் ஏர்டெல் நிறுவனத்திற்கு வந்து சேரும். மொத்தமாக ரூ.3,628 கோடிக்கான அறிவிப்பை பெற்றுள்ளது.
கூடுதலாக, நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் ஆகியவை ஒருங்கிணைப்பு முயற்சிகளை சிக்கலாக்கும். உதாரணமாக, ஏர்டெல் SES செயற்கைக்கோளைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் டாட்டா பிளே GSAT-ஐப் பயன்படுத்துகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications