நமது அண்டை நாடான பூட்டான் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று. 8 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடு. 1999ல் தான் இந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி அறிமுகமானது. அதற்கு அடுத்த 5 ஆண்டுகள் கழித்துதான் அவர்கள் செல்போன்களில் பேச தொடங்கினர்.
அந்த நாட்டில் 20க்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகள் உள்ளன. ஆனால் டிசோங்கா மொழி மட்டுமே எழுத்து வடிவில் உள்ளது மேலும் அது தேசிய மொழியாக உயர்த்தப்பட்டது. பள்ளிகளில் டிசோங்கா மற்றும் ஆங்கிலம் வாயிலாகவே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அந்நாட்டு இளைய தலைமுறையினர் டிசோங்கா மற்றும் ஆங்கிலத்துக்கு மாறுவதால் பல மொழிகள் குறிப்பாக சிறுபான்மை மொழிகள் அழிந்து வருகின்றன.

தற்போது டிசோங்கா மொழிக்கும் அந்த நிலை வந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளில் டிசோங்கா மொழி இலக்கணம் மற்றும் இலக்கியமாக மட்டுமே கற்பிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களும் உள்ளூர் மொழியை பயன்படுத்துவதை அவமானமாக கருதுகின்றனர் மேலும் பள்ளியில் பேசினால் தண்டிக்கப்படுகிறார்கள்.
தற்போது ஆங்கிலத்துக்கு எதிராக அந்நாடு தேசிய மொழியை ஊக்குவிக்கவும், பயன்படுத்தவும் கடுமையாக போராடுகிறது. ஒரு மொழி அதனை பேசுபவர்கள் இறந்தாலோ அல்லது வேறு மொழிக்கு மாறினாலோ அழிவை சந்திக்கும். அதன்படி, பூட்டானின் உள்ளூர் மொழிகள் வேகமாக அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் சமூக ஊடகங்களால் இப்போது அவை எல்லாம் மாறி வருகிறது. மீண்டும் உள்ளூர் மொழிகள் புத்துயிர் பெற தொடங்கியுள்ளன. அதனை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பெண்மணியான டெச்செனின் அனுபவம் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
பூடானின் தலைநகரான திம்புவில் வளர்ந்தவர் 40 வயதான பெண்மணி டெச்சென். இவரது பெற்றோர்கள் மத்திய பூட்டானை சேர்ந்தவர்கள். டெச்செனின் தாய் மொழி நியென்கா என்ற அழைக்கப்படும் மங்டிப். ஆனால் திம்புவில் அவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் அங்கு தேசிய மொழியான டிசோங்கா மற்றும் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கப்பட்டது. மேலும் வீட்டிலும் அனைவரும் டிசோங்கா பேசினர்.
கிராமத்தில் இருந்து தனது சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வரும்போது மட்டுமே அவர் தனது தாய் மொழியில் பேசினார். அதுவும் அவர்களுக்கு டிசோங்கா புரிந்து கொள்ள முடியாது என்பதால் தான். மலைகளில் உள்ள தனது கிராமத்துக்கு செல்லும் போது தாய் மொழியை பேசுவார். இதனால் அவருடைய தாய்மொழி அறிவு குறைவாக இருந்தது.
இருப்பினும் சமூக ஊடகங்களால் இப்போது எல்லாம் மாறி விட்டது. 90 சதவீத பூட்டான் மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர், அந்நாட்டின் அனைத்து தொலைதூர பகுதிகளில் சமூக ஊடகங்கள் பயன்பாடு விரிவடைந்துள்ளது. டெச்சென் உறவினர்கள் WeChat-ல் இணைந்துள்ளனர்.
அவர் 3 WeChat குழுவில் இருக்கிறார். அதில் மக்கள் தங்கள் சொந்த மொழியில் குரல் செய்திகள் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான WeChat பயனர்கள் தங்கள் குரல் வழியில் தாய் மொழியில் தொடர்பு கொள்கின்றனர்.
இதனால் அவரின் தாய்மொழி அறிவு அதிகரித்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 2 குழந்தைகளுக்கு தாயான டெச்சென் கூறுகையில், நான் நிறைய வார்த்தைகளை கற்றுக்கொள்கிறேன். என் சொந்த மொழியில் நிறைய விஷயங்களை எப்படி சொல்வது என்பதை கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications