வராக் கடன் அளவு 8.17 சதவீதமாக உயர்வு.. எல்ஐசி அதிரடி அறிவிப்பு..!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக விளங்கும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தற்போது மோசமான நிதிநிலையில் இருப்பதாகவும், வராக் கடன் அதிகரித்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது. இந்திய மக்களின் 80 சதவீத லைப் இன்சூரன்ஸ் வர்த்தகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் வராக் கடன் அதிகரிக்க என்ன காரணம்..?

இந்த மோசமான நிதிநிலையால் மத்திய அரசின் பங்கு விற்பனை திட்டம் தடைப்படும் அபாயம் உள்ளது.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

எல்ஐசி நிறுவனம் அதிகளவிலான கடனை ரியல் எஸ்டேட் துறைக்குக் கொடுத்துள்ளது. இந்த ரியல் எஸ்டேட் கடனில் பெருமளவில் தற்போது திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு எல்ஐசி நிதி நிலைக்குச் சவாலாக அமைந்துள்ளதாகவும் கூறுகிறது எல்ஐசி.

இதேபோல் கொரோனா பாதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை முடங்கியதன் எதிரொலியாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தற்போது திரும்பி செலுத்த முடியாமலும், சில முக்கிய முதலீடுகளின் மதிப்புச் சரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது எல்ஐசி.

இதன் எதிரொலியாக எல்ஐசி அமைப்பின் வராக்கடன் மதிப்புத் தற்போது 8.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

10 சதவீத பங்கு விற்பனை

10 சதவீத பங்கு விற்பனை

மத்திய அரசு தனது நிதி நெருக்கடியை சமளிக்காவும், நாட்டின் வளர்ச்சி பணிகளாக நிதி திரட்டும் பணியின் ஒரு பகுதியாக அரசு நிறுவனங்களில் வைத்திருக்கும் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யத் திட்டமிட்டது.

இதன் படி எல்ஐசி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது, ஆனால் இப்போது எல்ஐசி-யின் வராக் கடன் மதிப்பு 8.17 சதவீதமாக உயர்ந்த நிலையில், பங்கு விற்பனை திட்டம் விரைவில் நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.

 

அதிரடி உயர்வு

அதிரடி உயர்வு

எல்ஐசி நிறுவனத்தின் வராக் கடன் 2019ஆம் நிதியாண்டின் 6.15 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில், 2020ஆம் நிதியாண்டில் இதன் அளவு 8.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஓரே வருடத்தில் கிட்டதட்ட 2 சதவீதம் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியாகவே விளங்குகிறது.

இருப்பு நிலை

இருப்பு நிலை

2020ஆம் நிதியாண்டில் எல்ஐசியின் இருப்பு நிலை 30.56 டிரில்லியன் ரூபாயில் இருந்து 31.24 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் எல்ஐசி நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் கடன் பிரிவின் கடன் அளவு 4.09 சதவீதத்தில் இருந்து 4.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

இந்த அறிவிப்பின் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் எல்ஐசி நிறுவன பங்குகள் வெறும் 0.50 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இன்று காலையில் 263 ரூபாய் வரையில் உயர்ந்து வர்த்தக முடிவில் 259.70 ரூபாயாகக் குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+