ஏப்ரல் 1, 2025 முதல் பல முக்கிய நிதி விதிகள் இந்தியாவில் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த மாற்றங்கள் வருமான வரி செலுத்துவோருக்கு, UPI பயனர்களுக்கு, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமானவை. இந்திய அரசு மற்றும் பொருளாதார அமைப்புகள் மேற்கொண்டுள்ள இந்த மாற்றங்கள், நுகர்வோர் பாதுகாப்பு, வரி வசூல் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை அதிக சீர்திருத்தம் செய்யும் நோக்கில் அமைகின்றன.

2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி அடுக்குகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதில், வருடம் ₹12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் வரிவிலக்கு பெறுவார்கள். இதற்காக, ₹75,000 நிலையான விலக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், ₹12.75 லட்சம் வருமானம் வரை பெறும் ஒருவரும் வரிவிலக்கு பெற வாய்ப்பு உள்ளது.
இந்த புதிய வருமான வரி விதி நடுத்தர வகுப்பிற்கு பெரிய நன்மை அளிக்கும் வகையில் உள்ளது. இது ஒட்டுமொத்தமாக அதிக வரி செலுத்தும் சுமையை குறைக்கும் ஒரு முக்கியமான முடிவாகும். இதனால், பல தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அதிகளவில் நிவாரணம் கிடைக்கும். இந்திய தேசிய கட்டண கழகம் (NPCI) ஒரு புதிய UPI விதியை அமல்படுத்தியுள்ளது. இது, செயலற்ற எண்களிலிருந்து (Inactive Mobile Numbers) இனி UPI பரிவர்த்தனைகள் நடக்காது என்பதை உறுதி செய்கிறது.
இதன் முக்கிய காரணம், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் (Telecom Operators) செயலற்ற எண்ணை மீண்டும் புதிய பயனர்களுக்கு ஒதுக்குவதால், பழைய கணக்குகளில் தானாகவே தவறான பரிவர்த்தனைகள் நடைபெறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. இந்த மாற்றத்தால், பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை புதுப்பிக்க வேண்டும் மற்றும் UPI கணக்குகளின் செயல்பாட்டை பரிசோதிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரிவாட்ஸ் புள்ளிகள் மற்றும் சலுகைகளில் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. SBI Simply CLICK மற்றும் Air India SBI Platinum கிரெடிட் கார்டுகளின் ரிவாட்ஸ் புள்ளிகளின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Axis வங்கி , Air India இணைப்பு, Vistara கிரெடிட் கார்டு நன்மைகளில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால், கிரெடிட் கார்டு பயனர்கள் புதிய விதிகளை கவனமாக வாசித்து, அவர்களின் செலவின முறைகளை மாறுபடுத்திக்கொள்ள வேண்டும்.
2024 ஆகஸ்ட் மாதம் அறிமுகமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme - UPS), ஏப்ரல் 1, 2025 முதல் முழுமையாக செயல்படுத்தப்படும். இந்த திட்டம் பழைய ஓய்வூதிய முறையை மாற்றி, சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருகிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், அவர்கள் கடைசி 12 மாத சராசரி அடிப்படை சம்பளத்தின் 50% அளவுக்கு ஓய்வூதியம் பெறுவர். இது அரசுப் பணியாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய திட்டம், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தைக் கூடுதல் நிலைத்தன்மையுடன் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) கட்டமைப்பிலும் பாதுகாப்பு அம்சங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மல்டி-ஃபேக்டர் அங்கீகாரம் (MFA), ஜிஎஸ்டி போர்ட்டலை அணுகும் வரி செலுத்துவோர், இனிமேல் OTP அல்லது Biometric அடையாளத்துடன் தங்களது கணக்குகளை பாதுகாக்க வேண்டும். இனி 180 நாட்களுக்கு மேல் பழைய அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே EWB உருவாக்க அனுமதி வழங்கப்படும். இந்த மாற்றங்கள், GST மோசடிகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னேற்றங்கள் ஆகும்.
முக்கிய வங்கிகள், SBI, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி உள்ளிட்டவைகள், வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தேவைகளை புதுப்பிக்க உள்ளன. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கத் தவறினால், வாடிக்கையாளர்கள் புதிய அபராதங்களுக்கு உள்ளாகலாம். வங்கியின் மாற்றங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து, தங்கள் கணக்குகளில் தேவையான பணத்தை பராமரிக்க வேண்டும்.
இந்த விதிகள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தனிநபர்களும் வணிகங்களும் தங்களது நிதி மேலாண்மையை புதிய விதிகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications