இன்றைய உலகம் நிதி ரீதியாக மிகுந்த மாற்றங்களை சந்தித்து வருகிறது. பங்கு சந்தைகள் எப்போது விழும் என்ற பதற்றம், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவடைந்து வருவது, வங்கிக் கட்டுப்பாடுகள் மாற்றப்படும் என்ற அச்சம், இந்த அனைத்தும் பொதுமக்களின் நிதி நிலையைப் பெரிதும் பாதிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், நிதி உலகில் மிகவும் பிரபலமான எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி தனது கருத்துகளால் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். "Rich Dad Poor Dad" என்ற புத்தகத்தின் மூலம் உலகம் முழுவதும் மக்கள் அவரை நிதி ஆலோசகர், முதலீட்டு நிபுணர் என நம்பிக்கையுடன் பார்கிறார்கள்.
2025 ஏப்ரல் 13 அன்று அவர் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு உலக அளவில் கவனத்தை பெற்றது. "நிதி வீழ்ச்சி வந்துவிட்டது" என்ற அவரது கூற்றே பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது. அவர் கூறும்போது, தங்கம், வெள்ளி, பிட்காயின் ஆகியவை தற்போது மிகவும் முக்கியமான முதலீட்டு வாய்ப்புகள் என்று வலியுறுத்துகிறார். "தங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெள்ளிக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பிட்காயின் கர்ஜிக்கிறது! என்று ராபர்ட் கியோசாகி பதிவிட்டார்.

அவர் கூறியபடி, பங்குகள், பத்திரங்கள், பரிமாற்ற வர்த்தக நிதிகள் (ETFs), மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற மரபு முதலீட்டு கருவிகளில் முதலீடு செய்தவர்கள் மிகுந்த ஆபத்தில் உள்ளனர். அவர்போல் நிதி நிபுணர் ஒருவர் இவ்வாறு கூறுவதுதான் ஏன் முக்கியமாக இருக்கிறது என்றால், இது சர்வதேச நிதி அமைப்புகளின் தற்போதைய நிலையை நேரடியாக சுட்டிக் காட்டுகிறது. அவர் அமெரிக்க டாலரை "ஊழல் நிறைந்த, வக்கிரமான நாணயம்" எனக் கடுமையாக விமர்சிக்கிறார். அமெரிக்க பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி, ஜப்பான் வங்கி, இங்கிலாந்து வங்கி மற்றும் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி (BIS) ஆகியவற்றை அவர் "வஞ்சகமான உலக வங்கி கார்டெல்" என்று அழைத்திருக்கிறார்.
ராபர்ட் கியோசாகி தனது பல புத்தகங்களில் இதற்கான அடிப்படையை ஏற்கனவே எழுதி உள்ளார். அவரது முக்கியமான நாவல்களில் ஒன்று "Fake" (போலி), மற்றொன்று "Who Stole My Pension?" (என் ஓய்வூதியத்தை யார் திருடினார்?). இதில் அவர் மரபு கல்வியில் நிதி அறிவு இல்லாமையைப் பற்றியும், அரசு நாணயக் கொள்கைகள் எவ்வாறு பொதுமக்களை ஏமாற்றுகின்றன என்பதையும் கூறியுள்ளார்.
அவர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிதி கல்விக்குப் போதுமான முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்று வருத்தப்படுகிறார். அவரது பார்வையில், "கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்றாலும் பணம் பற்றிய உண்மையான அறிவு கிடைப்பதில்லை" என்பது சிந்திக்கவைக்கும் கருத்தாகும்.
2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தங்க விலை சர்வதேச சந்தையில் அதிவேகமாக உயர்ந்துள்ளது. தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. எனவே, தங்கத்தின் விலை உயர்வு சந்தை நிலைமைகள் அசாதாரணமாக இருப்பதற்கான முக்கிய குறிகாட்டியாக இருக்கலாம்.
வெள்ளி என்பது கணிசமான தொழில்துறை பயன்பாட்டிற்கான ஒரு பொருளாகும். இதனை மின்னணு உற்பத்தி, சூரிய உள் அமைப்பு, மருத்துவம் மற்றும் பல தொழில்களில் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். தொழில்துறை விரிவாக்கம் காரணமாக இந்தக் காலகட்டத்தில் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கிறது.
பிட்காயின், நவீன நிதி உலகின் பரபரப்பான சொத்து. 2024 இல் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, 2025 இல் பிட்காயின் மீண்டும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நிறைய முதலீட்டாளர்கள் இதனை டிஜிட்டல் தங்கம் எனக் குறிப்பிடுகிறார்கள். கியோசாகியின் கூற்றுப்படி, நமது மரபு முதலீட்டுகள் அனைத்தும் இன்று நெருக்கடியில் உள்ளன. பங்கு சந்தைகளில் ஏறத்தாழ 20%-30% வரையிலான வீழ்ச்சி வரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது ஓய்வூதிய நிதிகளை, சேமிப்பு கணக்குகளை, வர்த்தக நிறுவனங்களின் பணப்புழக்கத்தையும் பாதிக்கக்கூடும்.
கியோசாகி தன் பதிவில் ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை "முந்தைய நிதி இயக்கிகள்" என்று குறிப்பிடுகிறார். ஆனால், தற்போது இவர்களின் தலைமைத்துவத் தவறுகள் நம்மை ஒரு "பெரும் வீழ்ச்சியின் முகப்பில்" கொண்டு வந்து விட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இது ராபர்ட் கியோசாகி கூறும் முதல் எச்சரிக்கை அல்ல. மார்ச் 2023 இல் அவர் "எல்லாம் குமிழி வெடிக்கிறது" என்று கூறி, 1929 இல் ஏற்பட்ட மகா பொருளாதார வீழ்ச்சியை விட மோசமாக இருக்கக்கூடியது என கணித்தார். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை அவருடைய முன்னோட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
பலர் கியோசாகியின் கருத்துகளை "பயமுறுத்தும் விதமாக" விமர்சிக்கின்றனர். ஆனால், அவரது பல முன்னோட்டங்கள் உண்மையாக்கப் பட்டுள்ளன. பணவீக்கம், சொத்துக் குமிழிகள், கடன் மோசடியின் எதிரொலிகள் எல்லாம் தற்போது நிதி உலகில் காணப்படுகிறது. அவர் பல அறிவுரைகளை கூறுகிறார், மரபு முதலீடுகளை மறுபரிசீலனை செய்யுங்கள், தங்கம், வெள்ளி, பிட்காயின் போன்றவற்றை சேர்க்கத் தொடங்குங்கள், நிதி கல்வியை சுயமாக கற்றுக்கொள்ளுங்கள், அரசுகளும் வங்கிகளும் எப்போதும் பாதுகாப்பானவர்கள் அல்ல தனிப்பட்ட நிதி பாதுகாப்பு முக்கியம், புதிய தலைமுறை நிதி உத்திகளை ஆராயுங்கள் (கிரிப்டோ, நிதி சுயாதீனம் போன்றவை) என்று அவர் கூறினார்.
இன்றைய உலகம் நிதி ரீதியாக மிகுந்த மாற்றங்களுக்கும், நிச்சயமற்ற சூழ்நிலைக்கும் இடையில் சிக்கியுள்ளதோடு, அதில் இருந்து தப்பிக்க நம்மில் ஒவ்வொருவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது. முன்னதாகவே தயாராக இருப்பதுதான் புத்திசாலித்தனமான முதலீட்டாளரின் அடையாளம். உங்கள் பணத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பதை இன்று ஆராயுங்கள். வருங்காலம் திடீரென வந்து விட்டால், அதற்கான பாதுகாப்பு இன்று உங்களிடம் இருக்க வேண்டியது அவசியம்.
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?



Click it and Unblock the Notifications