தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடா வருடம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் பங்கேற்பாளர்களை ஒரு வீட்டிற்குள் அனுப்பி வாரம் வாரம் ஒரு நபர்களை வோட்டிங் மூலம் வெளியில் அனுப்புவார்கள். இறுதியில் யார் மிஞ்சி இருக்கிறார்களோ அவர்கள் தான் வின்னர். அப்படி தமிழ் பிக் பாஸில் பங்கேற்பாளராக வீட்டிற்குள் சென்ற சௌந்தர்யா நஞ்சுண்டன் தான் மோசடிக்கு பலியாகி ரூ.17 லட்சம் ரூபாயை இழந்ததாகக் கூறியுள்ளார்.
"வேற மாதிரி ஆபீஸ்" என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் பிரபலம் அடைந்த சௌந்தர்யா, தான் பண மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததால் பார்க்கும் பார்வையாளர்கள் மற்றும் சக பங்கேற்பாளர்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு தான் ரூ.17 லட்சம் ரூபாயை இழந்ததாகவும், இந்த மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது தனக்கு தெரியவில்லை என்றும், தயவுசெய்து அனைவரும் விழிப்புடன் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும், உணர்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.

யாரும் எதிர்பார்த்திராத வகையில் சௌந்தர்யாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த செய்தியை வெளியிட்டது, வீட்டில் தங்கி இருக்கும் பிற பங்கேற்பாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே இந்த வார எலிமினேஷன் நெருங்கி வருவதால் பதற்றம் நிலவுகையில் சவுந்தர்யா தான் ஏமாந்த செய்தி குறித்து வெளியிட்டார்.
முத்து, தீபக், விஷால், அருண், ஜாக்குலின், பவித்ரா, சஞ்சனா, அனந்தி, அன்ஷிதா மற்றும் சுனிதா போன்ற பங்கேற்பாளர்கள் எவிக்சன் லிஸ்டில் இருக்கின்றனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று நாளை அல்லது நாளைய மறுநாள் தெரியவரும். கூட்டணிகள் உருவாகி விளையாடும் யுக்திகள் தீவிரம் அடைந்து வருவதால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் போட்டியில் தங்களின் இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.
சௌந்தர்யாவின் உணர்ச்சிகரமான உரையாடல் இது போன்ற மோசடிகளின் தாக்கத்தை நினைவூட்டுகிறது. மேலும் டிஜிட்டல் உலகில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பார்வையாளர்கள் மற்றும் சக போட்டியாளர்களுக்கு உணர்த்துகிறது.
சமீபகாலமாக டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி அதிகரித்து வருகிறது. அதாவது சிபிஐ அதிகாரிகள் போல காட்டிக் கொண்டு செய்யாத தவறை செய்ததாக நம்ப வைத்து, அதற்காக பணம் செலுத்த சொல்லி மோசடி செய்வது தான் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி. 2024-ஆம் நிதியாண்டில் முதல் 4 மாதங்களில் மட்டும் ரூ.1,750 கோடியை மக்கள் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே உங்களை யாரேனும் தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறினாலோ அல்லது உங்களுடைய நம்பரை பயன்படுத்தி குற்றங்கள் நடந்திருப்பதாக கூறினாலோ, நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்துங்கள். அதன் பிறகு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications