இந்திய பங்குச் சந்தையில் பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு வருகின்றன என்பதும் அவை நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள முன்னணி சிற்றுண்டு நிறுவனங்களில் ஒன்றான பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் இன்று ஐபிஓ வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நவம்பர் 7ஆம் தேதியன்று ஐபிஓ பங்குகள் வெளியிட இருப்பதாகவும் இந்நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.881 கோடி திரட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.250 முதல் 300 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல்
இந்தியாவின் முன்னணி சிற்றுண்டி நிறுவனமான பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் புஜியா, நம்கீன், தொகுக்கப்பட்ட இனிப்புகள், பப்பாட் மற்றும் மேற்கத்திய சிற்றுண்டிகள் ஆகிய இனிப்பு வகைகள் மற்றும் மேற்கத்திய சிற்றுண்டி தயாரித்து வருகிறது. இன்று முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை இந்நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடப்படும் என்றும் குறைந்தபட்சம் 50 ஈக்விட்டி பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
வருமானத்தில் உரிமை
பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் ஐபிஓ பங்குகளை வாங்கும் பங்குதாரர்களுக்கு முழு வருமானத்தில் உரிமை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி இந்நிறுவனத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன
ஏற்றுமதி
இந்தியாவில் மட்டுமின்றி வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆபிரிக்கா மற்றும் ஆசிய பசுபிக் என 21 நாடுகளில் அதன் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .
தயாரிப்பு
இந்தியாவில் ராஜஸ்தான், அசாம்,கர்நாடகா ஆகிய பகுதிகளில் இந்நிறுவனத்தின் உணவு வகைகள் சிறந்த தரத்துடன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இனிப்பு வகைகளை ருசி பார்ப்பதற்கு என்றே நாடு முழுவதும் ஒரு கூட்டம் உள்ளது.
வருமானம்
நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 23 சதவிகிதம் அதிகரித்துரூ.1,610.96 கோடியாக இருந்தது என்றும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நல்ல வருவாய் பெற்று உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிகர லாபம்
ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் ரூ.419.16 கோடி என்பதும் நிகர லாபம் 15.7 கோடி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications