பிகானர்: பிகானெர் பூஜியா (Bikaneri bhujia) இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் புகழ்பெற்ற தின்பண்டம். இந்த பூஜியாவை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து 13,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் ஒருவர்.
ஹல்திராம்ஸ் (Haldiram) என்பது பிரபலமான தின்பண்ட நிறுவனம். இந்த ஹஸ்திராம்ஸை உருவாக்கிய குடும்பத்தின் வாரிசு தான் பிகாஜி பூஜியா (bikaji) என்ற பிராண்டையும் உருவாக்கியவர். சந்தையில் இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தின்பண்டங்களை விற்பனை செய்தாலும் இரண்டுமே ஒரே குடும்பத்தில் இருந்து உருவான நிறுவனம் தான்.

Bhikaram Chandmal கடந்த 1937 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் பிகானெர் பகுதியில் ஒரு சிறிய டீ கடையை தொடங்கினார். அந்த டீக்கடையில் பூஜ்ஜியா உள்ளிட்டவற்றை அவர் விற்பனை செய்ய தொடங்கினார். பின்னர் இது தான் ஹல்திராம்ஸ் என்ற மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. இந்த பிகாராமின் மகனான முல்சந்தின் மூத்த மகன் சிவரத்தன் அகர்வால். இவரது 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.
குடும்ப தொழிலில் ஆர்வம் பிறந்ததால் படிப்பை விடுத்து தொழிலில் இறங்கினார்.
தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட அவர் பின்னர் சிவதீப் ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் ஒரு தனி நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் வெறுமனே பூஜியா மட்டுமே தயாரித்து விற்பனை செய்தது. இதன் மூலம் தான் பிகாஜி பூஜியா என்ற பிராண்ட் உருவானது. தற்போது இந்தியாவின் முன்னணி தின்பண்ட நிறுவனம் ஆகவும் இது செயல்படுகிறது.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சிவரத்தன் அகர்வால் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த பூஜியாக்களை இயந்திரங்களின் மூலம் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என விரும்பினார்.
இதற்காக பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி இவரே சொந்தமாக பூஜியா தயாரிக்கும் இயந்திரங்களை வடிவமைத்தார். இதன் மூலமாகவே பிகானரி பூஜியா பெரிய அளவில் புகழ்பெற தொடங்கியது. தற்போது பிகாஜி ஃபுட்ஸ் நிறுவனம் 250க்கும் மேற்பட்ட தின்பண்டங்களை விற்பனை செய்கிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தின்பண்டங்களை ஏற்றுமதி செய்கிறது.
வளைகுடா நாடுகளில் இந்த பிராண்ட் மிகவும் பிரபலமாக இருக்கிறது . அது தவிர அமெரிக்கா ,ஜெர்மனி, ஸ்பெயின் ,மற்றும் பிற நாடுகளின் சந்தைகளிலும் பிகாஜி நிறுவன பூஜியாக்களை வாங்க முடியும். இந்த நிறுவனம் 2022 ஆம் ஆண்டு இந்திய பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
அக்டோபர் 14ஆம் தேதி நிலவரப்படி பிகாஜி ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 859 ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 21,353 கோடி . இதில் பிரமோட்டர்களே 75 சதவீத பங்குகளை சொந்தமாக வைத்திருக்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் 7.48 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications