சப்பாத்தி சுடும் பில் கேட்ஸ்..! அட அட பார்க்கவே கலக்கலா இருக்கே..!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், உலகின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராக இருக்கும் பில் கேட்ஸ் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் இணைந்து சப்பாத்தி செய்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போலப் பரவி வருகிறது.

உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியதன் மூலம் இளம் வயதிலேயே பில்லியனர் ஆன பெருமைக்கு உரியவர் பில் கேட்ஸ். சமீபத்தில் பில் கேட்ஸ் அவருடைய மனைவி உடனான விவாகரத்து, எலான் மஸ்க் உடன் கருத்து வேறுபாடு ஆகியவற்றின் மூலம் சோகத்தில் இருந்தார்.

இதை அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றும் வகையில் பில் கேட்ஸ் மகள் ஜெனிபர் கேட்ஸ் கர்ப்பமாக இருக்கும் செய்தி மூலம் தான் தாத்தாவாகப் போகும் செய்தியை கேட்டு மகிழ்ச்சியில் உச்சத்தில் இருந்ததை பில் கேட்ஸ்-ன் 2022 ஆம் ஆண்டின் முடிவில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

தாத்தா ஆகப் போகும் மகிழ்ச்சியுடன் 2023 புத்தாண்டைத் துவங்கிய பில் கேட்ஸ் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் இணைந்து இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் சப்பாத்தியை ஆரம்பம் முதல் தயாரித்த வீடியோ வெளியாகியுள்ளது.

செஃப் எய்டன் பெர்நாத்

செஃப் எய்டன் பெர்நாத்

இந்த வீடியோவில் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் பில் கேட்ஸ் கோதுமை மாவு-ஐ பிசைந்து, தேய்த்து, சப்பாத்தி கல்லில் சுடுவது வரையில் அவருடன் சேர்ந்து செய்தார். இந்த வீடியோ தற்போது டிவிட்டர் உட்படப் பல சமூகவலைத்தளத்தில் பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Didi Ki Rasoi கேன்டீன்

Didi Ki Rasoi கேன்டீன்

இதைத் தொடர்ந்து Didi Ki Rasoi என்னும் கேன்டீனில் பெண் ஒருவர் தனக்கு எப்படிச் சப்பாத்தி அதாவது ரொட்டி செய்வது எப்படி எனத் தனக்குக் கற்றுக்கொடுத்தாகத் தெரிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் Didi Ki Rasoi கேன்டீன் பெண்ணிடம் கற்றதை பில் கேட்ஸ் உடன் சேர்ந்து ட்ரை செய்யப் போவதாகப் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் தெரிவித்தார்.

சப்பாத்தி

சப்பாத்தி

இந்த வீடியோவில் பிரபல செஃப் எய்டன் பெர்நாத் உடன் பில் கேட்ஸ் கோதுமை மாவு-ஐ பிசைந்து, நெய்த்தை, சப்பாத்தி கல்லில் சுடுவது வரையில் அவருடன் சேர்ந்து செய்தார். இந்த வீடியோ தற்போது டிவிட்டர் உட்படப் பல சமூகவலைத்தளத்தில் பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

சமையல்

சமையல்

செஃப் எய்டன் பெர்நாத் இந்த வீடியோவில் பில் கேட்ஸ்-யிடம் கடைசியாக எப்போது சமைத்தீர்கள் எனக் கேட்டார். அதற்குப் பில் கேட்ஸ் சூப் சூடு செய்வது கணக்கில் எடுத்துக்கொண்டால் தொடர்ந்து செய்து வருகிறேன். ஆனால் அடிப்படையில் இதுபோன்ற சமையல் என்றால் நீண்ட காலத்திற்கு முன் செய்தேன் எனத் தெரிவித்தார்.

இந்தியா மீதான பார்வை

இந்தியா மீதான பார்வை

இந்திய உணவுகள் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது, காலம் காலமாக இந்தியா என்றால் பாலிவுட், வட இந்தியா, நான் - பன்னீர் பட்டர் மசாலா என்று மட்டுமே பேசி வந்த வெளிநாட்டினர்.

தென் இந்தியா

தென் இந்தியா

சமீபத்திய காலத்தில் அதிகளவிலான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் தென் இந்திய மற்றும் வட கிழக்கு இந்திய பகுதிகளைத் தேடி தேடி சுற்றிப் பார்த்து வீடியோ, போட்டோ எனச் சமுக வலைத்தளத்தில் நிரம்பி வருகிறது.

இந்திய உணவுகள்

இதனால் இந்தியா மீதும் இந்திய உணவுகள் மீதும், இந்திய கலாச்சாரம் மீது முன்பைவிட அதிகப்படியான புரிதலை தற்போது வெளிநாட்டினர் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்திய உணவான சப்பாத்தி சமைத்துள்ள வீடியோ சமுக வலைத்தளத்தில் டிரெண்டாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+