இந்த பொது தேர்தல்கள் பல மாற்றத்தைக் கொண்டு வந்தாலும், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது மிகவும் முக்கியமான கேள்வியாக உள்ளது. அடுத்த 5 வருடம் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றிபெற வேண்டும், அந்த வகையில் தற்போது மோடி தலைமையிலான NDA கூட்டணி 291 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
இதேபோல் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்திய முதலீட்டுச் சந்தைக்குத் தேவையான பெரும்பான்மையில் மோடி அரசு வெற்றி பெற வேண்டும் என்பது தான்.

தற்போது அது நடக்காது என்பதாலேயே சென்செக்ஸ் மாலை 3 மணிக்கு 4643.71 புள்ளிகள் சரிந்து 71,914 புள்ளிகளை அடைந்துள்ளது, நிஃப்டி குறியீடு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 1440.60 புள்ளிகள் சரிந்து 21,823.30 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் ப்ளூ சிப் பங்குகளையும் காவு வாங்கியுள்ளது.
தேர்தல் முடிவுகளும், மோசமான பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு மத்தியில் அதானி குழும பங்குகள் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. கடந்த சில வாரங்களில் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டிய அதானி குழும பங்குகள், இந்த திடீர் சரிவு முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனத்திலிருந்து சுமார் ரூ.45 லட்சம் கோடி வரையில் குறைந்த நிலையில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பில் இருந்து ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் எக்சிட் போல் அடிப்படையில் இல்லாத காரணத்தால் முதலீட்டாளர்கள் கிடைக்கும் லாபத்தை எடுத்துக்கொண்டு பங்குகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். திங்கட்கிழமை வர்த்தக அமர்வில், அதானி குழும பங்குகள் உயர்ந்து, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பை ரூ.1.4 லட்சம் கோடி உயர்த்தி, சுமார் ரூ.20 லட்சம் கோடிக்கு கொண்டு சென்றது. ஆனால் இன்று 2 மடங்கு சரிவை சந்தித்துள்ளது.
இன்று மதியம் 3 மணியளவில் அதானி குழுமத்தில் இருந்து பங்குச்சந்தையில் இருக்கும் 10 நிறுவனங்களின் நிலை
அதானி எண்டர்பிரைசஸ் - 20.00 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 21.32 சதவீதம் சரிவு
அதானி பவர் - 16.46 சதவீதம் சரிவு
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் - 20.00 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 19.31 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 19.18 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 9.99 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 14.79 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 17.34 சதவீதம் சரிவு
NDTV - 18.27 சதவீதம் சரிவு
இன்றைய சரிவின் மூலம் திங்கட்கிழமை பதிவான மொத்த உயர்வை காட்டிலும் 2 மடங்கும் அதிக சந்தை மதிப்பை அதானி குழுமம் செவ்வாய்க்கிழமை இழந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், தொழிலதிபர் கௌதம் அதானியும் நீண்ட கால நண்பர்கள் ஆவார்கள். இருவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, கௌதம் அதானி வளர்ச்சிக்கு நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்ததிலிருந்து தற்போது பிரதமராக இருந்தது வரையில் பல உதவிகளை செய்துள்ளாதாக விமர்சனம் தொடர்ந்து எழுகிறது. ஆனால் இதுவரையில் எதையும் நிரூபணம் செய்யப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
அதானி குழுமம் தற்போது நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய நிறுவனம், துறைமுக நிறுவனம், நிலக்கரி சப்ளை நிறுவனம், மின்சார விநியோக நிறுவனம், சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் என பல பட்டங்களைப் பெற்றுள்ளது. மேலும் மோடி தலைமையிலான ஆட்சி காலத்தில் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பும், அவரது சொத்து மதிப்பும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
தற்போது இந்தியாவில் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 10.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்து 79.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications