கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்திற்கு மத்தியில் டாலர் மதிப்பில் சரிவு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையிலும் சரி, இந்திய சந்தையிலும் சரி தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலையில் எலக்ட்ரம் நிறுவனத்தின் தலைவரும், பில்லியனருமான தாமஸ் கப்லான் தங்கம் விலை குறிதது வெளியிட்டுள்ள கருத்து பலரையும் அதிர வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

வரும் காலத்தில் தற்போது 4580 டாலருக்கு வர்த்தகமாகம் தங்கம் ஒரு அவுன்ஸ் 50000 டாலர் வரையில் உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இது தற்போதை விலையை காட்டிலும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலையாகும். தங்கம் விலையில் ஏற்படுத்தும் உயர்வு என்பது வெறும் சாத்தியகூர்கள் மட்டுமல்ல இது உலக பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத ஓன்றாக இருக்கிறது என தெரிவித்தார்.
தங்கம் விலை கடந்த 10 வருடத்தில் பார்த்தால் பெரும்பாலான ஆண்டுகளில் மிகவும் மந்தமான வளர்ச்சியை மட்டுமே கொடுத்தது, ஆனால் 2025ல் இருந்து வரலாறு காணாத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தில் புல் ரன் கதை முடிந்ததா..? அடுத்த 2-3 வருடத்திற்கு கிணற்றில் போட்ட கல் போன்று மந்தமாகவே தான் இருக்குமா என்ற பல கேள்வி எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தான் தாமஸ் கப்லான் கிட்கோ தளத்திற்கு அளித்த பேட்டியில் தற்போதைய உலக நாடுகளின் அதீத கடன், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு மத்தியில் தங்கம் விலை வரும் காலாத்தில் 30000, 40000, 50000 டாலர் வரையில் உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
ஒரு அவுன்ஸ் தங்கம் 50000 டாலர் எனில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 95 ரூபாய் என வைத்துக்கொண்டால் இந்தியாவில் 10 கிராம் தங்கம் விலை 15 லட்சம் வரையில் விற்கப்படும்.
இதேபோல் தாமஸ் கப்லான் எப்போது தங்கம் 50000 டாலரை தொடும் என்பதை குறிப்பிட்டு சொல்லவில்லை, இது நீண்ட கால கணிப்பாகும். அதேபோல் அடுத்த 5-10 வருட காலத்தில் கூட தங்கம் விலை பல 1-2 மடங்கு அதிக விலைக்கு வர்த்தகம் செய்யப்படுவும் வாய்ப்புள்ளது எனவும் இந்த பேட்டியில் தெரிவித்தார்.
தற்போதைய சரிவு என்பது தங்கத்தின் புல் ரன்னில் நடக்கும் சிறிய கரெக்ஷன் என்பதையும் கப்லான் தெரிவித்தார். இதை 1987ல் நடந்த கரெக்ஷன் போலவே இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் இனி வரும் காலத்தில் இவை ரீடைல் விற்பனை பொருளாக இருப்பது குறையக்கூடும் வாய்ப்பும் உள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி அதாவது 6 மாதத்தில் தங்கத்தின் நுகர்வு அளவு 17 சதவீதம் (எடை அடிப்படையில்) குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியா முழுவதும் தங்க நகை கடன் வர்த்தகம் தாறுமாறாக உயர்ந்திருக்கும் காரணத்தால் இப்பிரிவு வர்த்தகத்திற்குள் டாடா கேப்பிடல், காட்ரேஜ் கேப்பிடல், ஆதித்யா பிர்லா குழுமம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை உயர்வு குறித்து தாமஸ் கப்லான் மட்டும் அல்லாமல் Rich Dad Poor Dad புத்தகம் எழுதிய ராபர்ட், ஜாம் ராஜர்ஸ் போன்ற பலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications