அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் ரூ.11,300 கோடி உயர்ந்ததையடுத்து, புதன்கிழமை வர்த்தகத்தில் இக்குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு மீண்டும் 200 பில்லியன் டாலர் அளவை தொட்டு சாதனை படைத்துள்ளது.
200 பில்லியன் டாலர் என்றால் கிட்டத்தட்ட ரூ.16.9 லட்சம் கோடி, ஹிண்டர்பெர்க் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமான அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீட்டுக்கு தற்போது எட்டியுள்ள 200 பில்லியன் டாலர் மதிப்பீடு முக்கிய மைல்கல் ஆகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி வழங்கலில் முறைகேடு இல்லை என மறுத்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கை கொண்டதே இந்த தடாலடி உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
பங்குச்சந்தை தரவுகளின்படி, புதன்கிழமை வர்த்தகத்தில் மட்டும் அதானி குழுமத்தில் இருந்து பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள் உயர்வின் மூலம் அதன் சந்தை மதிப்பீடு ரூ.11,300 கோடி உயர்ந்தது. கடந்த இரண்டு வர்த்தக நாளில் அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் ரூ.56,250 கோடி அதிகரித்துள்ளது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை.
மேலும் கடந்த ஒரு வருடத்தில் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மூலதனம் 56.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், நிஃப்டி குறியீடு 23.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய விருப்பினால் ஒவ்வொரு நிறுவனத்தின் நிதி நிலையைக் கணக்கில் கொண்டு முதலீடு செய்யவும்.
இந்த 200 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு உயர்வு அதானி குழுமத்திற்கு எதிரான புகார்களுக்கு மத்தியில் உயர்ந்துள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. லண்டனை தளமாகக் கொண்ட 'பைனான்சியல் டைம்ஸ்' பத்திரிக்கை, பில்லியனர் ஜார்ஜ் சோரஸ் முதலீட்டில் இயங்கும் 'ஆர்கனைஸ்டு கிரைம் அண்ட் கரப்ஷன் ரிப்போர்ட்டிங் ப்ராஜெக்ட்' (OCCRP) ஆவணங்களை மேற்கோள் காட்டி, 2013 ஆம் ஆண்டில் தரம் குறைந்த நிலக்கரியை அதிக மதிப்புள்ள எரிபொருளாக விற்றதாக குற்றம் சாட்டியது.
அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கூட்டுக் குழு விசாரணைக்குக் கோரிக்கை விடுத்தனர்.
அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிலக்கரி ஏற்றப்படும் மற்றும் இறக்குமிடம் ஆகிய இடங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்வு கழகம் (டேங்கட்கோ) அதிகாரிகள் ஆகியோரால் தரம் சோதிக்கப்பட்டது.
"பல்வேறு அமைப்புகளால் பல்வேறு இடங்களில் இத்தனை விரிவான தரம் சோதனை செயல்முறையைக் கடந்து வந்த நிலக்கரி குறித்து, தரம் குறைந்த நிலக்கரி வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது நியாயமற்றது மட்டுமல்ல, முற்றிலும் தவறானது" என்று அவர் கூறினார்.
"மேலும், வழங்கப்பட்ட நிலக்கரிக்கு, செலுத்தப்படும் கட்டணம், சோதனை செயல்முறை மூலம் தீர்மானிக்கப்படும் தரத்தை அடிப்படையாகக் கொண்டது" என்று செய்தித் தொடர்பாளர் மேலும் விவரித்தார். இதனுடன், குறிப்பிட்ட நிலக்கரி தர ஆய்வில் பெறப்பட்ட முடிவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications