இன்றெல்லாம் உணவு டெலிவரி தளங்களை மக்கள் பிரபலமாக பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற முன்னணி நிறுவனங்களில் தினசரி அடிப்படையில் ஆர்டர்கள் குவிகிறது. இந்நிலையில் ஸ்விக்கி 2024-ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதிலிருந்தும் வந்த சில சுவாரசியமான உணவு ஆர்டர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
வெளியான அறிக்கையில் ஜனவரி 1 முதல் நவம்பர் 22 வரையிலான வரை 83 மில்லியன் ஆர்டர்களுடன் பிரியாணி அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக தனித்து நிற்கிறது. ஹைதராபாத் 9.7 மில்லியன் ஆர்டர்களுடன் முன்னணியில் உள்ளது. பெங்களூரு 7.7 மில்லியன் ஆர்டர்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. சென்னை 4.6 மில்லியன் பிரியாணி ஆர்டர்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. அப்போது சுமார் 6 பில்லியன் பிரியாணிகள் ஸ்விக்கி பிளாட்பார்ம் மூலம் ஆர்டர் செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதோடு வெளியான அறிக்கையில் ஆர்டர் பெறப்பட்ட நபர்களின் டேட்டாவும் உள்ளது. அப்படித்தான் கொல்கத்தாவை சேர்ந்த உணவு பிரியர் ஒருவர் உணவின் மீதுள்ள அலாதியான பிரியத்தின் காரணமாக ஜனவரி 1 அன்று அதிகாலை 4.1 மணிக்கு பிரியாணியை ஆர்டர் செய்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதோடு இரவு 12 முதல் 2 மணி வரையிலான நேரத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. சிக்கன் பர்கர் முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும் ரயில் பயணம் செய்யும் பயணிகள் அடிக்கடி ஆர்டர் செய்யும் உணவாக பிரியாணி உள்ளது. ஸ்விக்கி நிறுவனம் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனோடு (IRCTC) இணைந்து சில ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டும் உணவு விநியோகம் செய்து வருகிறது.
2024-ஆம் ஆண்டில் சிக்கன் ரோல் 2.48 மில்லியன் ஆர்டர்களுடன் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் என்ற பட்டத்தை பெற்றுள்ளது. 1.6 மில்லியன் ஆர்டர்களோடு பிரியாணி சிக்கன் மோமோஸ் 2-வது இடத்தை பிடித்துள்ளது. பொட்டேட்டோ ப்ரைஸ் 1.3 மில்லியன் ஆர்டர்களுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் மட்டுமல்லாமல் 2023-ஆம் ஆண்டின் சொமேட்டோ நிறுவனத்தின் ஆண்டறிக்கையிலும் புத்தாண்டு தினத்தன்று பிரியாணி தான் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக நிறுவனம் தெரிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications