கிரிப்டோ கரன்சி மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது உலகின் பல நாடுகளும் அனுமதித்து வருகின்றன. இதனால் கிரிப்டோ கரன்சியில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது கிரிப்டோ கரன்சி விலையினையும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
இதே சமீபத்தில் ஜேபி மார்கன் சேஸ் அண்ட் கோ ஒரு அறிக்கையில், முதலீட்டாளர்கள் கிரிப்டோ கரன்சியை ஏற்றுக் கொள்வது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை பாதிக்கக்கூடும் என்றும் கூறியிருந்தது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே, தங்கத்தில் இருந்து பணம் வெளியே எடுக்கப்பட்டு வருவதாகவும், பிட்காயின்களில் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன. அதோடு முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சியின் நீண்ட கால நோக்கில் முதலீடுகளை அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிட்காயின் வரலாற்று உச்சம்
பல நாடுகளில் கிரிப்டோகரன்சி தடை விதிகப்பட்ட நிலையிலும் கூட, தற்போது இதுவரை இல்லாத அளவு 20,000 டாலரை தாண்டியுள்ளது. முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகள், கச்சா எண்ணெய், தங்கத்தில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வரும் நிலையில், தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் சந்தைகள் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன.
தொடர் ஏற்றம்
இதன் காரணமாக தற்போது வளர்ந்து வரும் முதலீட்டு ஆப்சனான பிட்காயினில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக நேற்றுமட்டும் பிட்காயின் விலையானது ஒரே நாளில் 4.5% ஏற்றம் கண்டு 20,440 டாலராக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 5000 டாலர்கள் என்று இருந்த நிலையில், இன்று நினைத்து பார்க்க முடியாத அளவு எழுச்சி கண்டுள்ளது.
இந்தியாவில் அனுமதி
இது குறிப்பாக 2020ல் பிட்காயின் மதிப்பு இரட்டிப்பு வளர்ச்சி கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களையும் வர்த்தகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. பல்வேறு நாடுகளில் இந்த கரன்சியினை தடை செய்துள்ள நிலையிலேயே ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பல நாடுகளும் கரன்சியினை அனுமதிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக சமீபத்தில் அந்த தடையை நீக்கி, இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தினை செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது
சமீபத்திய காலங்களில் இந்த பிட்காயின் வர்த்தகம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இதன் மூலம் முதலீட்டாளர்களும் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். இதற்கிடையில் நிபுணர்கள் இந்த பிட்காயின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும். இது 2030ல் 1 கோடி ரூபாயினை எட்டும் என்றும் கணித்துள்ளனர். ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல ஆப்சன் என்றும் கூறியுள்ளனர்.
பிட்காயின் ஒரு சிறந்த முதலீடு
சமீபத்தில் வல்லுனர்கள் பிட்காயின் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற ஒரு திட்டம் என்றும் கணித்துள்ளனர். அதோடு ZebPayவின் தலைமை நிர்வாக அதிகாரி 2030க்குள் பிட்காயின் 1 கோடி ரூபாயினை எளிதில் எட்டலாம் என்று சமீபத்தியில் கூறியிருந்தார். ஆக பிட்காயினில் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு முதலீடு செய்யலாம் என்றும் கூறியிருந்தார்.
தங்கம் Vs பிட்காயின்
ஆக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பிட்காயினுக்கு மாற்ற தொடங்கினால், வரும் ஆண்டுகளில் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு இது சிக்கலாக இருக்கும். நிறுவன முதலீட்டாளர்கள் பிட்காயின் முதலீட்டினை தேர்தெடுக்க தொடங்கியுள்ளனர். ஆக இதனால் தங்கம் விலை பாதிக்கப்படுமா? அப்படியே பாதித்தாலும் விலை குறையுமா? அல்லது பாதுகாப்பு புகலிடமாகவே இருக்குமா? கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications