இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் துறையில் மிகவும் குறைந்த காலத்தில் பல கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற நிலையில் இதன் வாயிலாகவே தனது வர்த்தகக் குழுமத்தின் பிற சேவைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியாகப் பல கோடி மக்களை இணைக்கும் சேவையான ரீடைல் துறையின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
அனைத்து விதமான டிஜிட்டல் சேவைகளும் ஓரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது சூப்பர் ஆப் உருவாக்கும் பணியில் ஒருபுறம் தீவிரமாக இருக்கிறது. அதேவேளையில் மறுபுறம் ரிலையன்ஸ் ஜியோவில் இருக்கும் பல கோடி வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தனது வர்த்தகங்களைப் பல மடங்கும் உயர்த்தவும், வாடிக்கையாளர்களுக்குப் புதிய வர்த்தகச் சேவைகளைக் கொடுக்கவும் திட்டமிட்டு வருகிறது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் மிகப்பெரிய நிதி சிக்கலில் இருந்த பியூச்சர் குரூப் நிறுவனத்தின் வர்த்தகத்தை 24,713 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனால் தற்போது நடந்தது என்ன தெரியுமா..?
3வது இடம்
யூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின்பு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் ரீடைல் ஸ்பேஸ் 53 மில்லியன் சதுரடியாகவும், கிடங்கு பகுதி 18 மில்லியன் சதுரடியாகவும் உயர்ந்து உலகிலேயே 3வது பெரும் ரீடைல் நிறுவனமாக இருக்கும் டெஸ்கோ நிறுவனத்தைக் காட்டிலும் இடவசதியில் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
டெஸ்கோ
பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமாக விளங்கும் டெஸ்கோ சுமார் 50.1 மில்லியன் சதுரடி கொண்டு 2019ஆம் ஆண்டு மட்டும் சுமார் 6,391.1 கோடி பிரிட்டன் பவுண்ட் வருமானத்தைப் பெற்றுள்ளது. இந்த மாபெரும் நிருவனத்தை விடவும் பெரிட இடவசதியை இந்தியா போன்ற மிகப்பெரிய ரீடைல் வர்த்தகம் கொண்ட நாட்டில் ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ளது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வலிமையாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 53 மில்லியன் சதுரடி ரீடைல் வர்த்தகத் தளமும், 18 மில்லியன் சதுரடி கிடங்கு பகுதியையும் சேர்த்தால் இந்தியாவில் டாப் 8 நகரங்களில் இருக்கும் மால்களில் மொத்த பரப்பளவை விடவும் அதிகமாகும்.
மேலும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின்பு நாட்டின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக நிறுவனமாகவும் ரிலையன்ஸ் ரீடைல் உயர்ந்துள்ளது.
அதிரடி விரிவாக்கம்
பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றிய பின்பு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கடைகள் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்து 14,000 கடைகளாவும், ஆடை மற்றும் பேஷன் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 23 சதவீதம் உயர்ந்து 2,900 கடைகளாகவும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இதேபோல் குடோன் பகுதியின் அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் 80 சதவீதம் உயர்ந்து 18.2 மில்லியன் சதுரடியாக உயர்ந்துள்ளது.
வர்த்தகம்
பியூச்சர் குரூப் உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குப் புதிதாக 30,000 கோடி ரூபாய் அளவிலான புதிய வருவாயுடன் சேர்த்து, மொத்த விற்பனையின் அளவு 1,93,000 கோடி ரூபாய் ($29.5 பில்லியன்) அளவிற்கு உயர உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் வகைப்படுத்தப்பட்ட மொத்த ரீடைல் சந்தையின் 89 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் 30 சதவீத கைப்பற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications