யெஸ் பேங்க்-ன் வாடிக்கையாளர்கள், 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்கக் கூடாது என்கிற சிக்கலான கட்டுப்பாடு தான் நேற்று மாலை முதல் ஹாட் நியூஸாக பரவிக் கொண்டு இருக்கிறது.
இந்த செய்தியைக் குறித்து பல அரசியல்வாதிகளும் தங்கள் கருத்துக்களைச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த வரிசையின் முன்னணியில் இடம் பிடித்து இருக்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம்.
யெஸ் பேங்க் கட்டுப்பாடுகள்
யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்க முடியாது என்பதைத் தாண்டி, வங்கிக்கே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. யெஸ் பேங்க் இந்த கட்டுப்பாடு காலத்தில் எந்த ஒரு புதிய கடனையும் கொடுக்கவோ அல்லது பழைய கடனை புதுப்பிக்கவோ முடியாது. புதிதாக எங்கும் முதலீடு செய்ய முடியாது. இப்படி பல கட் அண்ட் ரைட் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது ஆர்பிஐ.
ப சிதம்பரம் 1
இந்த யெஸ் பேங்க் செய்தியைக் குறித்து ப சிதம்பரம் தன் டிவிட்டர் பக்கத்தில் "பாரதிய ஜனதா கட்சி தான் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. இவர்கள் இந்தியாவின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை நிர்வகிக்கும் மற்றும் முறைப்படுத்தும் லட்சணம் தற்போது தெரிந்துவிட்டது" என காட்டமாக பதிவு செய்து இருக்கிறார்.
ப சிதம்பரம் 2
மேலும் தொடர்ந்து பதிவிட்டு இருந்த முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் "முதலில் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி சிக்கலுக்கு உள்ளானது. இப்போது யெஸ் பேங்க் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த அரசுக்கு இதைப் பற்றி ஏதாவது வருத்தம் இருக்கிறதா? அரசு தன் பொறுப்பில் இருந்து விலகி விட முடியுமா? அடுத்து மூன்றாவது வங்கி ஏதாவது இருக்கிறதா?" என கேள்விக் கணைகளைத் தொடுத்து இருக்கிறார்.
தோல்வி
மேலும் யெஸ் பேங்கின் பிரச்சனை ஒரு முழு நிர்வாக தோல்வி எனச் சொல்லி இருக்கிறார். இத்தனை நடந்து கொண்டிருக்கும் போதும் மத்திய அரசு தொடர்ந்து அமைதியாக இருக்கிறது. ஏற்கனவே, மும்பை ஆர்பிஐ அலுவலகத்தில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதுவரை அரசு அதற்கு பதில் சொல்லவில்லை எனவும் சொல்லி இருக்கிறார் ப சிதம்பரம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications