சாமி பணம் கேட்டு மேலிடம் போன பூஜாரி! விஸ்வரூபம் எடுக்கும் யெஸ் பேங்க் ஜெகன்நாதர் பிரச்சனை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யெஸ் பேங்கில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக, வருஅம் ஏப்ரல் 03, 2020 வரை 50,000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் எனச் சொன்னது நினைவில் இருக்கலாம்.

யெஸ் பேங்கில் பெரிய தொகையினை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களில் பூரி ஜெகன்நாதர் கோவிலும் ஒன்று.

சுமார் 545 கோடி ரூபாய் கோவில் பணம், யெஸ் பேங்கிக் சிக்கிக் கொண்டதையும் நாம் அறிவோம். இப்போது இந்த 545 கோடி ரூபாய் டெபாசிட் பணப் பிரச்சனை அரசியலாகத் தொடங்கி இருக்கிறது.

பாஜக காங்கிரஸ் கேள்வி

பாஜக காங்கிரஸ் கேள்வி

ஒடிஸா மாநிலத்தை கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து நவீன் பட்நாயக் தான் முடி சூடா மன்னனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஒடிஸா மாநில அரசை விமர்சிக்க, இந்த பூரி ஜெகன்நாதர் பிரச்சனையில் கையில் எடுத்து இருக்கிறார்கள். அப்படி என்ன கேள்வி எழுப்புகிறார்கள்..?

கேள்விகள்

கேள்விகள்

பூரி ஜெகன்நாதர் கோவிலுக்குச் சொந்தமான 545 கோடி ரூபாய் பணத்தை யெஸ் பேங்கில் டெபாசிட் செய்யலாம் என எப்படி முடிவு செய்தது நிர்வாகம். பணத்தை டெபாசிட் செய்ய, யெஸ் பேங்கை தேர்வு செய்ய என்ன வழிமுறைகளைப் பின்பற்றி இருக்கிறார்கள் என வெள்ளை அறிக்கை சமர்பிக்கச் சொல்லி, கடந்த ஞாயிற்றுக் கிழமை கேள்வி எழுப்பி இருக்கிறது பாஜக.

ப்ரித்விராஜ் ஹரிசந்தன்

ப்ரித்விராஜ் ஹரிசந்தன்

"கடந்த மார்ச் 2019-ல் பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சொந்தமான பணம் பெரிய அளவில் யெஸ் பேங்கில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. யெஸ் பேங்க், அரசு சம்பந்தப்பட்ட பணப் பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடிய வங்கிகள் குழுவில் இல்லை. இது ஒரு ஊழல். இந்த ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார் பாஜக ஒடிஸா மாநில பொதுச் செயலாலர் ப்ரித்விராஜ் ஹரிசந்தன்.

பொறுப்பு

பொறுப்பு

மேலும் பேசிய ப்ரித்வி ராஜ் ஹரி சந்தன் "அரசுக்கு இந்த பிரச்சனையில் பொறுப்பு இருக்கிறது. வெறுமனே மத்திய அரசுக்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதங்களை எழுதிவிட்டு, தங்கள் கடமைகளில் இருந்து வெளியேறிவிடக் கூடாது" எனச் சொல்லி இருக்கிறார் ஒடிஸ மாநில பொதுச் செயலர். இப்படி அரசியல் ஒரு பக்கம் அனல் பறக்க, மறு பக்கம் இன்னொரு விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது.

நிதி அமைச்சர் கடிதம்

நிதி அமைச்சர் கடிதம்

ஒடிஸா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி மற்றும் பூரி ஜெகன்நாதர் கோவில் நிர்வாகமும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒடிஸாவில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கும், புரி ஜெகன்நாதரின் 545 கோடி ரூபாய் பணத்தைக் கேட்டு, கடிதங்களை எழுதி இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BJP is raising Puri Jagannath 545 crore yes bank deposit issue

The odisha state Bharatiya janata party is raising Puri jagannath temple's 545 crore yes bank deposit issue and asking question regarding it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X