ஹைதராபாத்: 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிதான் என சுப்பிரமணிய சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவ்வப்போது தனது சொந்தக் கட்சியினரையே விமர்சிப்பது சுப்பிரமணிய சுவாமியின் வழக்கமான செயல் தான்.
இந்த நிலையில் இந்தியா 2030க்குள் பொருளாதாரத்தில் வல்லரசு என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.
ஆண்டுக்கு 10% வளர்ச்சியா?
அதில் சுப்பிரமணிய சுவாமி பேசுகையில், இந்தியா வல்லரசாக வேண்டுமானால் ஆண்டுக்கு 10% வளர்ச்சி இருந்தால் தான் அது சாத்தியமாகும். மேலும் முதலீட்டு விகிதம் 37% ஆகவும் இருக்க வேண்டும். ஆக இதே வேகத்தில் இந்தியா பயணித்தால் சீனாவையே விஞ்சிவிடும். மேலும் அமெரிக்காவுக்கே சவாலாக மாறிவிடும் இருக்கும். மேலும் அடுத்த 50 ஆண்டுகளில் முதலாவது இடத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்
ஆனால் மேற்கூறிய அனைத்தும் நடக்க வேண்டுமெனில் நாம் முதலில் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும். இது எல்லாவற்றையும் விட முதலீடு செய்வோரை ஊக்குவிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் வருமான வரியை ரத்து செய்ய வேண்டும். எல்லாவற்றையும் விட வருமான வரி, ஜிஎஸ்டியை பார்த்து முதலீட்டாளர்கள் பயப்படாமல் இருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
மேலும் பிவி நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில், அவரது அமைச்சரவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார். அவர் பதவி வகித்த காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதற்காக நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி மிகப்பெரிய முட்டாள்தனம்
இந்த நூற்றாண்டில் ஜிஎஸ்டி வரி என்பது மிகப்பெரிய முட்டாள் தனமானது. மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி குழப்பமானது. அதை யாரும் புரிந்து கொள்ள முடியாது. எந்த படிவத்தை நிரப்புவது என தெரியவில்லை. மேலும் இதை ஆன்லைனில் அப்லோடு செய்ய சொல்கிறார்கள். ராஜஸ்தானின் பார்மர் பகுதியை சேர்ந்த ஒருவர் எங்கள் ஊரில் மின்சாரமே இல்லை. பின் நாங்கள் எப்படி ஜிஎஸ்டி படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது எனக் கேட்டார். நான் முதலில் உன் தலையில் ஏற்று பின்னர் பிரதமர் மோடியிடம் சென்று இதை கூறு என்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications