இந்தியாவில் நடக்கும் 5 மாநில தேர்தல் குறித்து இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளும் பேசி வருகிறது, இதற்கு முக்கியமான காரணம் இந்திய பங்குச்சந்தை தான் தற்போது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இருக்கும் ஒரே டிரம்ப் கார்ட்.
செப்டம்பர் காலாண்டில் டாப் 10 பெரும் பொருளாதார நாடுகளில் ஜிடிபி-யில் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்தது இந்தியா தான். இதேவேளையில் இந்தியாவின் முதலீட்டு ரேட்டிங் உயர்ந்து வருகிறது, அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையின் ரேட்டிங் சமீபத்தில் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்தியாவின் 5 மாநில தேர்தல், 2024ல் பொதுத் தேர்தல் என இரு முக்கியமான விஷயங்கள் நடக்கிறது.

இதனால் இந்தியாவில் ஆட்சி மாற்றம் குறித்தும், நீண்ட கால முதலீடு குறித்தும் ஆய்வு செய்ய இந்தத் தேர்தல் முடிவுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இதேபோல் இந்திய பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகளைச் செய்து வரும் இந்திய முதலீட்டாளர்களும் பிஜேபியின் 5 மாநில தேர்தல் பிஜேபியின் பிரகாசமான வெற்றி குறித்து டிவிட்டரில் அதிகம் பேசி வருகின்றனர்.
குறிப்பாக 5 மாநில தேர்தலில் மிசோரம் மாநிலத்தைத் தவிர்த்து 4 மாநில தேர்தல்களின் முடிவுகளில் BJP கட்சியின் வெற்றிப் பிரகாசமாக இருக்கும் காரணத்தால் திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் குறித்தும், 5 மாநில தேர்தல் 2024 தேர்தல் வெற்றி குறித்தும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் டிவிட்டரில் பணமழை பெய்யப் போவது போல் கொக்கரித்து வருகின்றனர்.
ஜிகே அகர்வால் என்பவர், பிஜேபி 3 மாநிலத்தில் வெற்றிப் பெற உள்ளது, பங்குச்சந்தைக்கு இதைவிட வேறு நல்ல விஷயம் என்ன வேண்டும். தற்போதைய நிலை நாளை பங்குச்சந்தையில் எதிரொலித்தால் மிகப்பெரிய கேப்-ஐ எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

வரிந்தர் பன்சான் என்பவர் நாளை பங்குச்சந்தையில் ஏற்படும் மாற்றத்தை விடுங்க, இன்று நடந்த விஷயம் தான் அடுத்த 10 வருடத்திற்கான வளர்ச்சி பாதை அமைக்கும். அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமெனில், இந்தியாவின் மீது உயர்வாக மதிப்பிடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இப்போதைய ரியாக்ஷன் இது தான் எனப் பைனான்ஸ் மீம்ஸ் பக்கத்தில் ஒருவர் குட்டி வீடியோவை பதிவு செய்துள்ளார்.
தெலுங்கானாவைத் தவிர 4 மாநில தேர்தல் முடிவுகளில் பிஜேபி-யின் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால், பாஜகவின் ஆட்சி தொடரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் பிஜேபி தொடர்ந்து உள்கட்டமைப்பு முதலீட்டில் அதிகப்படியான கவனம் செலுத்துவது தொடரும். இதனால் முதலீட்டாளர்கள் ரயில்வே, பாதுகாப்பு, மின்சாரம், உள்கட்டமைப்பு, எனர்ஜி டிரான்ஸ்சிஷன் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்யலாம் என நிவேஷ் கத்தா தெரிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறுவது பங்குச் சந்தைக்கு நல்ல செய்தி. பங்குச் சந்தைகள் எப்போதும் நிலையான அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கும். இதனால் பங்குச்சந்தை நாளை பாசிடிவ் ஆகத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனப் பேட்டில் ஆஃப் ஸ்டாக்ஸ் என்ற கணக்கில் பதிவிடப்பட்டு உள்ளது.

ஜிடிபி வளர்ச்சி, ஏற்றுமதி வளர்ச்சி, பணவீக்கம் குறைவது, ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு, நிதிப் பற்றாக்குறை குறைவது ஆகியவற்றின் மூலம் 2024ல் மீண்டும் முழுப் பெரும்பான்மை ஆட்சியை மத்தியில் பிஜேபி பெறும். இதனால் அடுத்தச் சில ஆண்டுகளுக்குப் பங்குச் சந்தைகளில் இந்தியாவின் வலுவான ஓட்டத்தை நாம் பெற முடியும் என நீரஜ் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications