புத்தாண்டு தினத்தன்று டெலிவரி ஆப்-களில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் குறித்த அந்தந்த தளங்கள் பகிர்ந்து கொள்ளும். அப்படி இதற்கு முன்னர் பிரியாணி, பீட்சா போன்றவற்றை வாங்கி மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். சில தளங்களில் சிப்ஸ் குளிர்பானங்கள் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை வாங்கி மகிழ்ந்தனர். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமான ஒரு பொருளை மக்கள் ஆர்டர் செய்துள்ளனர். புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் திராட்சை பழங்கள் திடீரென விட்டு தீர்ந்துள்ளது.
உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் தளமான பிளிங்கிட்டில் திடீரென திராட்சை பழங்கள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருளாக மாறியது. இதை பார்த்த பிளிங்கிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அல்பிந்தர் திண்ட்சாவிற்கு குழப்பம் ஏற்பட்டது. "அப்படி என்ன திராட்சை மீது திடீர் மோகம்? காலையிலிருந்து ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களில் திராட்சையும் ஒன்று. வழக்கமான நாட்களில் ஆர்டர் வருவதைவிட 7 மடங்கு அதிகமாக திராட்சைகளை டெலிவரி செய்துள்ளோம்", என்று தனது X பக்கத்தில் கேள்வி எழுப்பி போஸ்ட் செய்திருந்தார்.

மக்கள் ஏன் திராட்சை பழங்களை வாங்கினர்?: திடீரென திராட்சை விற்கப்பட்டதற்கான காரணம் குறித்து பலர் அல்பிந்தரின் போஸ்டுக்கு பதில் அளித்தனர். சில பயனர்கள் ஸ்பெயினில் "லாஸ் டோஸ் உவாஸ் டி லா சூர்டே" என்ற பெயரில் மாதமாதம் நள்ளிரவில் 12 திராட்சைகள் சாப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. இதை சாப்பிடுவதால் வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அலிகாண்டேவில் உள்ள ஒயின் தயாரிப்பாளர்கள் அதிகப்படியான திராட்சைகளைக் கொண்டிருந்தனர். எனவே புத்தாண்டில் செழிப்பை கொண்டு வரும் விதம் அவற்றை உண்ணுபடி மக்களை ஊக்குவித்தனர். சமீபத்தில் இது குறித்த பல்வேறு போஸ்ட்கள் சமூக ஊடகத்தளங்களில் பரவலானது. சில இன்ஃப்ளேன்ஸர்கள் தொடர்ந்து மாதம் மாதம் 12 திராட்சைகளை நள்ளிரவில் சாப்பிடுவதால் தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்ததாக தெரிவித்தனர்.
திடீரென திராட்சை வாங்கப்பட்டதன் பின்னால் உள்ள காரணத்தை தெரிந்து கொண்ட அல்பிந்தர், புத்தாண்டு தினத்தன்று வேறு எந்தெந்த பொருட்கள் விற்பனையானது என்பது குறித்த சாட்டையும் பகிர்ந்திருந்தார். 8-வது அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருளாக திராட்சை உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications