ப்ளூ கிளவுட் சாப்ட்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கணினி சாப்ட்வேர் மற்றும் டேட்டா பிராசசிங் சேவைகள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மல்டிபேக்கர் ஐடி பங்குகளில் இதுவும் ஒன்று. இருப்பினும் கடந்த பல மாதங்களாக இந்நிறுவன பங்குகளின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. 2024 ஜூலை 19ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.130.50ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று தொடக்கத்தில் இந்நிறுவன பங்கின் விலையில் சரிவு காணப்பட்டது. இந்த சூழ்நிலையில், பின்னாக்கிள் ஹாஸ்பிடல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, வெளிநோயாளி மேலாண்மை அமைப்பு செயல்படுத்துதலுக்கான ஆர்டரை பெற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது. இதனையடுத்து இந்நிறுவன பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.31.79வரை சென்றது. இந்நிறுவன பங்கு அன்றைய குறைந்தபட்ச விலையிலிருந்து சுமார் 5 சதவீதம் உயர்ந்தது. இருப்பினும் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை சரிவுடன் முடிவடைந்தது.

ப்ளூ கிளவுட் சாப்ட்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.127.26 கோடி ஈட்டியுள்ளது. அதே காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.9.30 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் வருவாய் மட்டும் நிகர லாபம் வளர்ச்சி கண்டுள்ளது. 2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.121.38 கோடியும், நிகர லாபமாக ரூ.8.78 கோடியும் மட்டுமே ஈட்டியிருந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் ப்ளூ கிளவுட் சாப்ட்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவன பங்கு விலை 450 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2021 ஜூலையில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.7.65ஆக இருந்தது. கடந்த திங்கட்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவடைந்தபோது, இந்நிறுவன பங்கின் விலை ரூ.30.96ஆக இருந்தது. நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.45 சதவீதம் குறைந்து ரூ.30.51ஆக இருந்தது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications