மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் பாதுகாப்பு துறைக்கு மின்னணு உபகரணங்கள் மற்றும் சிஸ்டம்ஸை தயாரித்து வழங்குகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் அரசு நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். மேலும், இந்நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் வாயிலாக மத்திய அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. நவரத்னா அந்தஸ்து நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் மற்றும் போனஸ் பங்குகளை வழங்கி வருகிறது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டில் 3 முறை டிவிடெண்ட் அறிவித்தது. கடைசியாக 2024 ஆகஸ்ட் 14ம் தேதியன்று பங்கு ஒன்றுக்கு 80 காசுகள் இறுதி டிவிடெண்டாக அறிவித்தது. அதற்கு முன் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் பங்கு ஒன்றுக்கு தலா 70 காசுகள் டிவிடெண்டாக வழங்கியது. 2023ம் ஆண்டில் இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.1.80 டிவிடெண்ட் வழங்கியது. இந்நிலையில் இன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவது தொடர்பாக அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், 2024-25ம் நிதியாண்டுக்கான இடைக்கால டிவிடெண்ட் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய 2025 மார்ச் 5ம் தேதி புதன்கிழமையன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நடைபெற உள்ளது என்று தெரிவித்து இருந்தது. அதன்படி, இன்று நடைபெறும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில், இடைக்கால டிவிடெண்ட் தொகை முடிவு செய்யப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இன்று இடைக்கால டிவிடெண்ட் தொகையை அறிவிப்பதுடன், டிவிடெண்டுக்கான பதிவு தேதியையும் அறிவிக்கும். இன்று டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டால், இது நடப்பு 2024-25ம் நிதியாண்டுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வழங்கும் முதல் இடைக்கால டிவிடெண்டாக இருக்கும். டிவிடெண்ட் குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.04 சதவீதம் உயர்ந்து ரூ.270.05ஆக இருந்தது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளை காட்டிலும் சிறப்பாக இருந்தது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 47.33 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,316 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.893.30 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 37 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.5,643 கோடியாக அதிகரித்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.4,120 கோடியாக இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்கு முதலீட்டாளர்களுக்கு 176 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் குறுகிய கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீ்ட்டாளர்களுக்கு இழப்பே ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 11 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 10 சதவீதம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 7 சதவீதம் சரிவடைந்துள்ளது.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications