பிரபலமான பாலிவுட் நட்சத்திரங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட விலையுயர்ந்த மற்றும் சொகுசு வீடுகள் வைத்திருப்பார்கள். நல்ல முதலீடு மற்றும் எதிர்காலத்தில் விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்பதே இதற்கு காரணம்.
பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங் 2014 டிசம்பரில் மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள தலா 1,324 சதுர அடியில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை தலா ரூ.4.64 கோடிக்கு வாங்கி இருந்தார். இந்த குடியிருப்பு வளாகத்தில் அவருக்கு ஆறு பார்க்கிங் இடங்களும் உள்ளன.

ரன்வீர் சிங் தற்போது அந்த குடியிருப்புகளை ரூ.15.25 கோடிக்கு அதே வளாகத்தில் குடியிருக்கும் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இது ஒரு சாதாரண நிகழ்வுதானே இதில் என்ன இருக்கு என்ற எண்ணம் ஏற்படும்.
ஆனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியவர் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவர் என்பதுதான் இந்த டீல் வெளிச்சத்துக்கு வந்தது முக்கிய காரணம். நடிகர் ரன்வீர் சிங்கிடம் இருந்து குடியிருப்புகளை வாங்கியவர் ஓபராய் ரியாலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான விகாஸ் ஓபராய்.
விகாஸ் ஓபராய் இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களில் ஒருவர். நாட்டின் மெகா பணக்காரர்கள் பட்டியலில் ரூ.30,364 கோடி சொத்து மதிப்புடன் 58வது இடத்தில் உள்ளார். இவரது மனைவி பிரபலமான பாலிவுட் நடிகை. ஸ்வதே படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமான பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி தான் இவரது மனைவி.
முப்பது ஆண்டுகளுக்கு முன் விகாஸ் ஓபராயின் தந்தை ரன்வீர் ஓபராய், ஓபராய் ரியாலிட்டி லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்நிறுவனம் குடியிருப்பு, வணிகம், ஹோட்டல் மற்றும் ரீடெய்ல் ரியல் எஸ்டேட் துறைகளில் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.
ஓபராய் ரியால்டி பல உயர்தர ரியல் எஸ்டேட் ஒப்பந்த திட்டங்களை நிறைவு செய்துள்ளது. ஓபராய் ரியால்டி அண்மையில் மும்பையில் கட்டிய த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட் வளாகம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications