கொரோனா தொற்றுக் காரணமாக நீண்ட காலமாக இந்தியாவில் சினிமா தியேட்டர் இயக்குவதில் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் சினிமா துறை அதிகளவிலான பாதிப்பு அடைந்து வருகிறது. இதற்கிடையில் ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனை சேவை நிறுவனமான புக் மை ஷோ வர்த்தகம் இல்லாமல் கடுமையாகப் பாதித்துள்ளது.
இதன் வாயிலாகப் புக் மை ஷோ தனது நிதிநிலையைச் சமாளிக்கவும், தொடர்ந்து சேவை அளிக்கும் வகையில் மாற வேண்டும் என இலக்குடன் சுமார் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து புக் மை ஷோ நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஆசிஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புக் மை ஷோ நிறுவனம்
கொரோனா மூலம் பெரும் வர்த்தகத்தை இழந்த புக் மை ஷோ 2வது முறையாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. லாக்டவுன் காரணமாகச் சினிமா ரிலீஸ் எண்ணிக்கையும் பெரிய அளவில் குறைந்து. இதனால் சினிமா துறை மட்டும் அல்லாமல் சினிமா துறை சார்ந்து இருக்கும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது.
80 சதவீத வர்த்தகம் இழப்பு
அதேபோல் கடந்த ஒரு வருடம் லாக்டவுன் காரணமாகத் தியேட்டர்கள் பெரும்பாலான நேரம் மூடப்பட்டு இருந்த காரணத்தால் நிறுவனத்தை நிலையாக நடத்த முடியாமல் முடங்கியுள்ளது. இதனால் புக் மை ஷோ கடந்த ஒரு வருடத்தில் சுமார் 80 சதவீத வர்த்தகத்தை இழந்துள்ளது.
மொத்தம் 470 ஊழியர்கள் பணிநீக்கம்
கடந்த வருடம் மே மாதம் புக் மை ஷோ சுமார் 270 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது புதிதாக 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் 2020ல் 1500 ஊழியர்களை வைத்திருந்த புக் மை ஷோ தற்போது 1000 ஆகக் குறைந்துள்ளது.
புக் மை ஷோ சிஇஓ டிவீட்
ஊழியர்கள் பணிநீக்கம் குறித்துப் புக் மை ஷோ நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஆசிஷ் தனது டிவிட்டரில் கோவிட் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. இன்று புதிதாக ஒன்று கற்றுக்கொண்டேன். தற்போது பணிநீக்கம் செய்யப்படும் 200 ஊழியர்களும் மிகவும் திறமையானவர்கள். அனைவருக்கும் புக் மை ஷோ நிறுவனத்தில் பணியாற்றியதிற்கு நன்றி தெரிவித்துள்ளனர் என டிவீட் செய்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications