மோடி தலைமையிலான அரசு அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்புக்கு பின்பு இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்த வேண்டுமென திட்டமிட்டு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது, இதை சரி செய்யவும் மாற்று வருவாய் ஈட்டும் வழியை தேடி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மத்திய அரசுக்கு முக்கியமான வழி கிடைத்துள்ளது, ஆம் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தும் வாய்ப்பு மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஒரு அமெரிக்க அமைப்பின் கணிப்பு.

அமெரிக்காவின் எனர்ஜி இன்பர்மேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற அமைப்பு, 2026-ஆம் ஆண்டில் பிரென்ட் கச்சா எண்ணெயின் சராசரி விலை 52 டாலராக குறையும் என்று கணித்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் தற்போதைய 66 டாலர் மதிப்பில் வர்த்தகமாகி வருகிறது.
இதே எண்ணெய் 2025-இல் 71 டாலர் என்ற சராசரி விலையையும் 2024 ஆம் ஆண்டில் 80 டாலர் என்ற நிலையில் இருந்தது, இதை பார்க்கும் போதும் அடுத்த ஆண்டு 52 டாலர் வரையில் குறையும் என்பது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
2004-ஆம் ஆண்டு முதல் பிரென்ட் கச்சா எண்ணெய் 52 டாலர் அல்லது அதற்கு குறைவாக 2015 மற்றும் 2020 ஆகிய இரு வருடத்தில் மட்டுமே பதிவானது. இத்தகைய பெரும் மாற்ற 2026ல் நடக்கப்போவதால் பொருளாதார வளர்ச்சியில் பெரும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் EIA அமைப்பு மட்டும் அல்லாமல் கோல்ட்மேன் சாசஸ் போன்ற வால்ஸ்ட்ரீட் வங்கிகள் 2026-இல் பிரென்ட் விலையை 56 டாலருக்கு குறையும் என்றும், ஜேபி மார்கன் 58 டாலர் வரையில் குறையும் என்றும் எதிர்பார்த்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த கணிப்புக்கும் சமீபத்தில் OPEC+ நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்புக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. சந்தைக்கு வரும் கூடுதல் கச்சா எண்ணெய் காரணமாக விலை குறைய உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவது இந்தியாவின் இறக்குமதி செலவுகளை குறைக்க உதவும் என்பது தான் இந்த கணிப்பின் மைய கருத்தாக உள்ளது.
2022-23 நிதியாண்டில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக சுமார் 158 பில்லியன் டாலர் தொகையை செலவு செய்த விலையில், இதன் விலையில் ஏற்படும் சிறிய வீழ்ச்சியும் பெரிய லாபத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் ரஷ்யாவின் தள்ளுபடி கச்சா எண்ணெய், எத்தனால் கலப்பு ஆகியவற்றின் மூலம் 2025 ஏப்ரல்-ஆகஸ்ட் காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 17 சதவீதம் குறைந்து 50 பில்லியன் டாலராக உள்ளது. இந்த சேமிப்பு, அரசின் நிதி சுமையை குறைக்கும், மேலும் எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்த உதவும்.
இந்த சூழ்நிலையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 52 டாலராக குறையும் பட்சத்தில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் மீதான வரியை உயர்த்தி ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் ஏற்படும் இழப்பை சரி செய்ய முடியும்.
இதேபோல் இந்த வரி விதிப்பு ரீடைல் விற்பனை விலையை பாதிக்காமல் இருக்கும் வகையில், தற்போதைய விலை எவ்விதமான மாற்றமும் இல்லாத வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் 2026ல் அசாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை குறைப்பு பயனை மக்களுக்கு மத்திய அரசு வழங்கவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் எரிபொருள் விலை குறைப்பு மூலம் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் காரணத்தால், மத்திய அரசின் முடிவு அப்போதைய காலக்கட்டத்தை பொருத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி குறைப்பு மூலம் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இதுமுக்கிய வழியாக இருக்கும் காரணத்தால் மத்திய அரசு கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலனை உடனடியாக அளிக்காது என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications