இந்தியாவின் முன்னணி பேக்கரி உணவு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பல உணவு பொருட்களை பெரு நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரையில் விற்பனை செய்தாலும் இந்த ஒரு பொருளை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது.
பிரிட்டானியா இந்தியாவின் முன்னணி பிஸ்கட் விற்பனை நிறுவனமாக இருக்கும் போதும் ஒரு பொருளை 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வது என்பது பெரிய விஷயம் இல்லை, ஆனால் புதியாக ஒரு பொருளை அறிமுகம் செய்து ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான்.
மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு விஷயத்தை கூடுதலாக விற்பனை செய்வது என்பது மிகவும் எளியது, ஆனால் இதேநேரம் புதிதாக ஒரு பொருளை கொண்டு சேர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதை டக்கராக செய்துள்ளது பிரிட்டானியா, அப்படி இந்நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் என்ன தெரியுமா..?
இந்திய பேக்கரி உணவு
இந்திய பேக்கரி உணவு பொருட்கள் விற்பனையில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த Treat Croissant-ன் விற்பனை 100 ரூபாய் அளவீட்டை ஒரு வருடத்திற்குள்ளேயே எட்டியுள்ளதாக பெருமையுடன் கூறியுள்ளது.
Treat Croissant விற்பனை
Treat Croissant-ஐ பிரிட்டானியா நிறுவனம் தனது சொந்த தொழிற்சாலையில் சொந்தமாக தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த Croissant-ன் ரெசிபி-யை இந்தியர்களுக்கு பிடிக்கும் வண்ணம் மாற்றப்பட்டு உள்ளது என்றும் பிரிட்டானியா தெரிவித்துள்ளது.
வருண் பெர்ரி
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை தலைவர் வருண் பெர்ரி கூறுகையில் தனது நிறுவனம் ஸ்னாக்ஸ் வர்த்தகத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் Treat Croissant அறிமுகமும் அதன் வெற்றியும் மிகவும் முக்கியமானது.
உலக தரம் அனுபவம்
பிரிட்டானியா Treat Croissant மூலம் நிர்வாகம் இந்திய மக்களுக்கு உலக தரம் வாய்ந்த அனுபவத்தை மலிவான விலையில் கொடுத்துள்ளோம் என பிரிட்டானியா தெரிவித்துள்ளது. பிரிட்டானியா Treat Croissant-ஐ நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா..? சாப்பிட்டு இருந்தா கமெண்ட் பண்ணுங்க.
300 கோடி ரூபாய் டார்கெட்
வாடிக்கையாளரின் விருப்பம், தேவையை உணர்ந்து பிரிட்டானியா nascent பிரிவை பிரபலமான உணவுகளை அறிமுகம் செய்ய உள்ளோம், இப்பிரிவில் 3 வருடத்தில் 300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது தான் இலக்கு என பிரிட்டானியா தெரிவித்துள்ளது.
GenZ மற்றும் மில்லினியல்
மேற்கத்திய நாடுகளின் உணவுகளை இந்திய மக்கள் நுகரும் அளவும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதேபோல் ரெடி டூ ஈட் ஸ்னாக்ஸ் வகைகளுக்கான டிமாண்ட் GenZ மற்றும் மில்லினியல் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கான எடுத்துக்காட்டு தான் பிரான்ஸ் நாட்டின் உணவான Croissant இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள்ளேயே 100 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை Treat Croissant பெற்றுள்ளது என தலைமை வணிக அதிகாரி, யுதிஷ்டர் சிருங்கி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications