மும்பை பங்குச்சந்தையில் சனிக்கிழமை சிறப்பு வர்த்தக அமர்வில், இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கியுள்ளது. 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 283 புள்ளிகள் அல்லது 0.40 சதவீதம் உயர்ந்து 71,967 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 88 புள்ளிகள் அல்லது 0.41 சதவீதம் உயர்ந்து 21,710 ஆகவும் வர்த்தகமானது.
நிஃப்டி மிட்கேப் 100 0.86 சதவீதம் மற்றும் ஸ்மால் கேப் 0.54 சதவீதம் உயர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தாக்கம் அதிகமாக இருந்தது. உலக அளவில் இன்று ஆசிய சந்தைகள் மூடப்பட்டன. நேற்று இரவில் முடிந்த அமெரிக்க வால் ஸ்ட்ரீட் சந்தை லாபத்துடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை (Jan 19) வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) ரூ.3,689.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர், அதே சமயம் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DII) ரூ.2,638.46 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதாகப் பரிமாற்றத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய பங்குச் சந்தை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3:30 மணி வரை திறந்திருக்கும் மற்றும் திங்கட்கிழமை மூடப்பட்டிருக்கும். ஜனவரி 22, திங்கட்கிழமை அயோத்தியில் ராமர் கோயில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பங்குச் சந்தை சனிக்கிழமை இரண்டு சிறப்பு அமர்வுகளில் வர்த்தகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த இரு அமர்வுகளில் பங்குகள் மற்றும் F&O சந்தைகள் தனித்தனியாக disaster recovery இணையத் தளத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. இந்த disaster recovery site என்பது பங்குச்சந்தையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக இதைச் சரி செய்யவும், முதலீட்டாளர்கள் வர்த்தகத் தகவல்களை எவ்விதமான இழப்புமின்றி மீட்டு எடுக்கவும் இது பயன்படும்.
இந்த டெஸ்டிங்க் முறையை விடுமுறை தினமான சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஜனவரி 22, திங்கட்கிழமை அயோத்தியில் ராமர் கோயில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவை முன்னிட்டு மகாராஷ்டிராவில் விடுமுறை அளிக்கப்பட்டதால், இன்று முழு வர்த்தக நாளாக மாற்றப்பட்டது.
இதன் மூலம் இன்று பங்குச்சந்தை வழக்கம் போல் காலை 9.00 முதல் 3.30 மணிவரையில் நடைபெறும். மேலும் சிறப்பு அமர்வுக்கு, என்எஸ்இ 5% என்ற PRICE BAND அடிப்படையில் வர்த்தகமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முழு நாள் வர்த்தகம் என்பதால் சாதாரண வர்த்தக நாளுக்குப் பொருந்தக்கூடிய வகையில் அதன் PRICE BAND ஜனவரி 20 ஆம் தேதி வர்த்தகத்தில் செயல்படும்.
இதனால் திங்கட்கிழமை பங்குச்சந்தைக்கு விடுமுறை, முதலீட்டாளர்களே மறந்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications