இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இன்று காலை வர்த்தகத்தில் பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ளனர், காலை வர்த்தகம் துவங்குவதற்கு முன்பாக 1200 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிவைச் சந்தித்தது சென்செக்ஸ் குறியீடு. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் அனைத்து துறை சார்ந்த குறியீடுகளும் சரிவைச் சந்தித்தது. இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணம் இஸ்ரேலும், சீனாவும் தான். காலை வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு மதிப்பு குறைந்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியச் சந்தை இன்று (வியாழக்கிழமை) பெரும் சரிவைக் கண்டுள்ளது. இஸ்ரேல்-க்கு பக்கபலமாக அமெரிக்கா இருப்பது மட்டும் அல்லாமல் இஸ்ரேல் ராணுவத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்ய உள்ளதாகவும், அமெரிக்க ராணுவம் இஸ்ரேல் படையுடன் இணைந்து பணியாற்றவும் உள்ளது.

அமெரிக்கா களத்தில் இறங்கியிருக்கும் காரணத்தால் இது பெரிய போராக வெடிக்காது எனக் கூறப்பட்டாலும், ஈரான் மீதான பதில் தாக்குதல் மிகவும் மோசமாக இகுக்கும் என்பதில் எவ்விதமான மாற்றமுமில்லை. இதேவேளையில் ஈரான் மீது புதிதாகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக தடைகள் விதிக்கப்பட உள்ளதாகப் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.
ஈரான் ஏற்கனவே அணு ஆயுதம் வைத்துள்ளதாகச் சந்தேகித்து மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள காரணத்தால் மோசமான வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் எதிர்கொண்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் புதிய தடைகள் ஈரான் மீது விதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கம் ஏற்படும்.
இத்தகைய இடியாப்ப சிக்கலில் தான் இன்று சர்வதேச பங்குச்சந்தைகள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின், இஸ்ரேல் - ஈரான் போர் மூலம் இந்திய சந்தைக்கு நேரடியான பாதிப்புகள் இல்லை. ஆனால் இதன் மூலம் அமெரிக்க பங்குச்சந்தையிலும், கச்சா எண்ணெய் சந்தையிலும் ஏற்படும் பாதிப்புகள் தான் இந்திய சந்தைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய செவ்வாய்க்கிழமை தாக்குதல் புதன்கிழமை இந்தியச் சந்தைகளில் எதிரொலித்திருக்க வேண்டும், ஆனால் காந்தி ஜெயந்தி காரணமாகப் புதன்கிழமை சந்தைக்கள் மூடப்பட்டிருந்தன, இதனால் இதன் தாக்கம் அனைத்தும் இன்று எதிரொலிக்கிறது.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்திற்கு பழிவாங்கும் விதிமாகதான் ஈரான் 200க்கும் அதிகமான ஏவுகணைக்களை ஏவி பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பின்பு முதல் பாதிப்பு கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டது. இன்றுவரையில் இதன் தாக்கம் குறையாமல் உள்ளது.
இன்று கச்சா எண்ணெய் ஸ்பாட் சந்தையில் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 0.91 சதவீதம் அதிகரித்து 71.01 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 0.86 டாலர் அதிகரித்து 74.76 டாலராக உள்ளது.
நேற்றைய வர்த்தக முடிவில் அமெரிக்க சந்தையின் முக்கிய குறியீடான டாவ் ஜோன்ஸ் பியூச்சர்ஸ் 0.25 சதவீதம் சரிந்து 42,091 புள்ளிகளை அடைந்தது. ஆனால் எஸ்&பி 500, நாஸ்டாக் ஆகியவை கணிசமான உயர்வுடன் சரிவில் இருந்து தப்பித்தது. இதனால் இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1250 புள்ளிகள் சரிவில் இருந்து வர்த்தகம் துவங்கி சில நிமிடத்திலேயே 551 புள்ளிகள் சரிவுக்கு குறைந்தது.
இந்தியாவில் முதலீட்டாளர்களின் பெரிய அச்சமே சீனா தான், ஈரான் - இஸ்ரேல் பிரச்சனை கூட இரண்டாம் பட்சம் தான். சீனா அரசின் சமீபத்திய பொருளாதார ஊக்கம், கடன் அளிக்கும் விகிதம், வட்டி குறைப்பு ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கிய சந்தையாக மாறியுள்ளது.
சீனா அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில வருடங்களாக சீன பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெரிய அளவில் குறைந்து இருந்தது. இதனால் சீன நிறுவன பங்குகள் undervalued என்ற நிலையில் இருந்தது. தற்போது சீனா அரசு தனது பென்ச்மார்க் வட்டி விகித்தை 1.7 சதவீதம் முதல் 1.5 சதவீதமாக குறைத்தது மட்டும் அல்லாமல் 141.2 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை வங்கிகள் வாயிலாக கடனாக கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே undervalued நிலையில் இருக்கும் சீனா பங்குகளுக்கு 141.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்கம் என்பது டபுள் ஜாக்பாட் மாதிரி. இந்த ஒரு அறிவிப்பால் சீனா சந்தையில் கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையில் இருந்து முதலீடுகள் குவிந்து வருகிறது. சொல்லப்போனால் இந்திய பங்குகள் Overvalued ஆக இருக்கும் காரணத்தால் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் சில பன்னாட்டு முதலீடுகளும் சீன சந்தைக்கு சென்றுள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் இன்றைய சரிவுக்கு மட்டும் அல்லாமல் அடுத்த வார சரிவுக்கும் சீனா சந்தை முக்கிய காரணமாக இருக்கும். இதோடு ஈரான் - இஸ்ரேல் தாக்குதல் மூலம் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்படும் தடுமாற்றமும் இந்திய சந்தையை பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications