கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதி முதல் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இன்று இந்திய பங்குச் சந்தைகள் பலத்த அடி வாங்கின. குறிப்பாக சென்செக்ஸ் இன்று காலையில் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நாட்டின் டிசம்பர் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த கவலை,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நிலைப்பாட்டில் நிலையற்ற தன்மை, கடும் அழுத்தத்தில் ஐடி பங்குகள், டாலர் இன்டெக்ஸ் அதிகரிப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடிவாங்கியது. இவற்றை தவிர மேலும் 5 முக்கிய காரணங்களால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. .

ஏமாற்றம் தந்த வங்கிகள்
பிராஃபிட் மார்ட் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் அவினாஷ் கோரக்ஷ்கர் கூறுகையில், இந்திய வங்கிகளின் நான்காவது காலாண்டு (மார்ச் காலாண்டு) வருவாய், சந்தை மதிப்பீடுகளை காட்டிலும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஏமாற்றமளிக்கும் இந்த செய்தியை சந்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிப்டி 50 இன்டெக்ஸின் வலிமையில் வங்கிகளின் பங்கு 30 சதவீதம் உள்ளது. எனவே இந்த செய்தி நிப்டி மற்றும் சென்செக்ஸில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்தார்.
எம்எஸ்சிஐ மறுசீரமைப்பு
முதலீட்டு ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, பங்கு இன்டெக்ஸ் மற்றும் இதர சேவைகளை நிதி நிறுவனங்களுக்கு வழங்குகிறது. இந்நிறுவனத்தின் மோர்கன் ஸ்டான்லி கேபிட்டல் இன்டர்நேஷனல் (எம்எஸ்சிஐ) குறியீடுகளை அடிப்படையாக கொண்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்வார்கள். விரைவில் எம்எஸ்சிஐ மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம். இந்த மறுசீரமைப்புக்கு பிறகு வர்த்தக அளவு பாதிக்கப்படலாம் மற்றும் ஒரு குறிப்பிட்ட பங்குக்கு பணம் வருதல் அல்லது வெளியேறுதல் ஆகியவையும் பாதிக்கப்படலாம். மறுசீரமைப்பு முன்னதாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்களது நிலைகளை மீண்டும் சமநிலைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவை விரும்பும் அன்னிய முதலீட்டாளர்கள்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்க பங்குச் சந்தை உலகின் பிற பகுதிகளிலிருந்து பெரும் மூலதன வரவை ஈர்த்து வருகிறது. மறுபுறம் சீனாவின் பங்குச் சந்தைகளும் முதலீட்டை ஈர்த்து வருகின்றன. சீன அதிபர் அண்மையில் அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை, சீனாவில் வளர்ச்சி மீட்சிக்கான நம்பிக்கையை தூண்டியது. சீன பங்குச் சந்தையும் இதற்கு சாதகமாக பதிலளித்தது. சீன பங்குச் சந்தையில் பங்குகள் மதிப்பு குறைவாக உள்ளதால், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு விற்பனை செய்து அந்த பணத்தை சீன பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இந்திய பங்குச் சந்தைகளில் சரிவுக்கு இதுவும் முக்கிய காரணம்.
அமெரிக்க பத்திர வருவாய்
அமெரிக்க பத்திர சந்தையில் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு தற்போது நல்ல வருவாய் கிடைக்கிறது. இதனால் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளை விற்பனை செய்து, அதில் வருவாயை அமெரிக்க பத்திர சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு விவகாரம் முடிவுக்கு வரும் வரை அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளை விற்பனை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கலில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்
இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். அதேசமயம் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ய முன்வருவதில்லை. ஏனென்றால் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக விலை இருக்கும் போது பங்குகளை விற்பனை செய்கின்றனர் அதேசமயம் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக விலையில் மாட்டிக் கொண்டுள்ளனர். இதனால் சந்தையை பற்றிய தெளிவான படத்தை பெறும் வரை உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களை அவர்கள் மறுசீரமைக்க வாய்ப்பில்லை.
Story written by: Subramanian
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications