மத்திய அரசின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் சுமார் 19,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைதொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இருந்தாலும் தனியாக நிறுவனங்களுக்கு நிகரான சேவையையும் வளர்ச்சியையும் இந்த நிறுவனத்தால் எட்ட முடியவில்லை.

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் 19000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான சங்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நிலைமைக்கு உண்மையில் யார் காரணம் என கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களின் சங்கத்திற்கான பொதுச் செயலாளர் அபிமன்யு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராபர்ட் ரவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது இருக்கக்கூடிய நிதி பிரச்சனைகளுக்கு ஊழியர்கள் காரணம் கிடையாது, நிறுவன வருவாயை பெருக்காத நிர்வாக திறமையின்மையே காரணம் என கூறியுள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த கட்டாய விருப்ப ஓய்வு திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிர்வாக திறமையின்மையே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதே தவிர ஊழியர்கள் அல்ல என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகத்தின் தவறை சரி செய்தால்தான் நிறுவனம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எம்டிஎன்எல் நிறுவனத்தில் இப்படி பல முறை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது, அது நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தவில்லை, இறுதியில் அந்த நிறுவனமே மூடப்பட்டது என்பதை ஒரு உதாரணமாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 29,750 பேர் எக்ஸிக்யூட்டிவ் ஆகவும் 26,435 பேர் நான் எக்ஸிக்யூடிவ் பணிகளிலும் இருக்கின்றனர். 2020 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் முதன்முறையாக விருப்ப ஓய்வு திட்டத்தை கொண்டு வந்தது.
அப்போது சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர். இந்த நிலையில் மேலும் 19 ஆயிரம் ஊழியர்களை குறைக்கும் நோக்கில் பிஎஸ்என்எல் நிறுவனம் அரசிடம் விருப்ப ஓய்வு திட்டத்திற்காக 1500 கோடி ரூபாயை கேட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொருத்தவரை தன்னுடைய ஊழியர்களின் மேலாண்மைக்காக மட்டும் 7500 கோடி செலவு செய்கிறது, இது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய வருமானத்தில் சுமார் 38 சதவீதம் ஆகும். இதனை 5000 கோடி என குறைக்கும் நோக்கில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications